Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள்; ராகுலின் பாரத் ஜோடோ யாத்திரை பலனளிக்கவில்லையா?

மக்களிடம் ஒரு தாக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள நடைபயணங்களும், யாத்திரைகளும் உதவும், அது கட்சியை மறுமலர்ச்சி செய்யவும், தேர்தல்களில் நல்லதொரு அறுவடையை பெற்று தரும் என அரசியல் கட்சிகளிடத்தில் ஒரு நம்பிக்கை உள்ளது.

கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை ஒற்றுமை யாத்திரை

ராகுல் காந்தியின் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை நடைபெறும் பாரத் ஜோடோ யாத்திரைக்கும் தேர்தல் தொடர்பு இல்லை என காங்கிரஸ் தலைவர்கள் பலமுறை கூறியுள்ளனர். ஆனால், மக்கள் தொடர்புக்கான நடைப்பயணம், தேர்தல்களில் பிரதிபலிக்கும் எனவும் சுனங்கி கிடந்த கட்சிக்கு புது ரத்தம் பாய்ச்சும் என காங்கிரஸ் நம்புகிறது என்பதை மறுப்பதற்கில்லை.

காங்கிரஸின் இந்த நம்பிக்கை டெல்லி மாநகராட்சி தேர்தலில் எந்த அளவுக்கு உதவியிருக்கிறது என்பது டிசம்பர் 7ம் தேதி தெரிந்துவிடும். மேலும் தொடர்ந்து வரும் குஜராத் மற்றும் இமாச்சல பிரதேச மாநில தேர்தல் முடிவுகளிலும் காங்கிரஸ் நம்பிக்கையை காப்பாற்றி இருக்கிகிறதா என்பது தெரிவித்துவிடும். ஆனால் தேர்தல் கருத்துக் கணிப்புகள் என்னவோ பாரத் ஜோடோ யாத்ரா உடனடியாக பலனை பெற்று தராது என்பதையே கூறுகின்றது.

image

டெல்லி மாநகராட்சி தேர்தல் நிலவரம் எப்படி?

டெல்லி மாநகராட்சி தேர்தலில் காங்கிரஸுக்கு சில வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது. காரணம், டெல்லி மாநகராட்சியை 15 ஆண்டுகளாக பாஜக ஆட்சி செய்து வருகிறது. மத்தியில் பிஜேபி தலைமையிலான அரசு இயக்குவதால், அதிகாரத்துவ தலையீடுகள் மூலம் டெல்லி மாநகராட்சி எப்படி இயங்குகிறது என்பதை மக்கள் கவனித்து வந்துள்ளனர். மறுபக்கம், 2014ம் ஆண்டு முதல் டெல்லி சட்டசபையில் ஆம் ஆத்மி கட்சி உள்ளது. எனவே பிஜேபி மற்றும் ஆம் ஆத்மி ஆகிய இரு கட்சிகளின் மீதிருக்கு அதிருப்தி ஒருவகையில் காங்கிரஸுக்கு உதவும் என்ற எதிர்ப்பார்ப்புகள் நிலவுகிறது.

ஆனால் கருத்துக் கணிப்புகளோ, இந்த அதிருப்தி ஓட்டுகள் காங்கிரஸுக்கு வெற்றி வாய்ப்பை பெற்று தராது என்கிறது. காரணம், டெல்லியின் 250 வார்டுகளில் ஆம் ஆத்மி கட்சி 149 முதல் 171 வார்டுகளையும், பாஜக 69 முதல் 91 வார்டுகளையும் கைப்பற்றும் எனவும், ஐந்து முதல் ஒன்பது வார்டுகளை வெல்லக்கூடிய மற்ற அரசியல் கட்சிகளை விட காங்கிரஸ் மூன்று முதல் ஏழு வார்டுகளில் வெற்றி பெறும் என கருத்து கணிப்புகள் கூறுகிறது.

ராகுலின் குஜராத் யுக்தி பலன் அளிக்கவில்லையா?

இதே போல், குஜராத்திலும் 27 ஆண்டுகளாக பாஜக ஆட்சி செய்து வருகிறது. தனது ஆரம்ப திட்டத்தை மாற்றிக்கொண்ட ராகுல் காந்தி, தனது பாரத் ஜோடோ யாத்திரையை பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த மாநிலத்திற்கு அழைத்துச் சென்று பேரணிகளை நடத்தினார். ஆனால், தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளின்படி, குஜராத்தில் பாஜகாவே தொடர்ந்து நீடிக்கலாம் எனவும் 129 முதல் 151 இடங்கள் வரை மகத்தான வெற்றியைப் பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

image

இந்தியா டுடே-ஆக்சிஸ் மை இந்தியா கருத்துக் கணிப்பு குஜராத்தில் பாஜக 46 சதவீத வாக்குகளைப் பெறலாம் என்றும், காங்கிரஸ் 26% மற்றும் ஆம் ஆத்மி கட்சி 20 % வாக்குகளைப் பெறலாம் என்று கணித்துள்ளது.

மறுபுறம், இமாச்சல பிரதேசத்தில் ஆளும் பாஜகவின் மீது மாநில பிரிவினை போன்ற பல நெருக்கடிகள் அனைத்தும் காங்கிரஸுக்கு பலன் தரும் என்றாலும் கூட பாஜகவுக்கும் காங்கிரஸுக்கும் போட்டி சரிசமமான போட்டியே நிலவும் .

கருத்து கணிப்புகள் நிலவரம்:

குஜராத் - 182 தொகுதிகள் பெரும்பான்மைக்கு 92 இடங்கள்

Republic:

பாஜக : 128-148
காங்கிரஸ் : 30-42
ஆம்ஆத்மி : 2-10
பிற : 0-3

NDTV:

பாஜக : 128
காங்கிரஸ் : 44
ஆம்ஆத்மி : 7
பிற : 3

Newsx:

பாஜக : 117-140
காங்கிரஸ் : 34-51
ஆம்ஆத்மி : 6-13
பிற : 0

News18:

பாஜக : 117-140
காங்கிரஸ் : 34-51
ஆம்ஆத்மி : 6-13
பிற : 0

இமாச்சல் - 68 தொகுதிகள் பெரும்பான்மைக்கு 35 இடங்கள்

Republic:

பாஜக : 34-39
காங்கிரஸ் : 28-33
ஆம்ஆத்மி : 0-1
பிற : 1-4

TimesNow:

பாஜக : 38
காங்கிரஸ் : 28
ஆம்ஆத்மி : 0
பிற : 2

NewsX:

பாஜக : 32-40
காங்கிரஸ் : 27-34
ஆம்ஆத்மி : 0
பிற : 1-2

கருத்துக் கணிப்பு குறித்த விரிவான தகவல்களை காண இந்த வீடியோவை பார்க்கவும்..

இதையும் படியுங்கள் - ‘ஒருவர் எத்தனை மின் இணைப்பு வைத்திருந்தாலும், 100 யூனிட் மின்சாரம் இலவசம்’-செந்தில் பாலாஜி

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

https://ift.tt/Vcbl8Tp

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

கருத்துரையிடுக

0 கருத்துகள்