ஈபிஎஸ்க்கு பொதுச்செயலாளர் எனக் கடிதம் ! செயற்கையாக பல்வேறு குளறுபடிகளை உருவாக்குவதாக ஓ.பன்னீர்செல்வம் விமர்சனம். பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் மறைவுக்கு நேரில் சென்று இரங்கல் தெரிவிக்கும் வகையில், டெல்லி செல்வதற்காக மதுரை விமான நிலையம் வந்த அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒ பன்னீர்செல்வம் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ஒ பன்னீர்செல்வம்,
மாநில தேர்தல் ஆணையம் கடிதம் கொடுத்திருப்பது குறித்த கேள்விக்கு,
”அதிமுகவின் சட்ட விதிகளின்படி, தொண்டர்கள் இணைந்து கழக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்று தான் அறிவிக்கப்பட்டுள்ளது. அது தான் உண்மை. ஒருங்கிணைப்பாளராக நானும் இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியும் தான் இருந்தோம். தற்போதுவரை முறைப்படி இந்தியத் தேர்தல் ஆணையம் இன்று வரை அப்படித்தான் கடிதம் அனுப்பி உள்ளது. இடையில் பல்வேறு பிரச்சனைகளைச் செயற்கையாக உருவாக்கினார்கள்”
மத்திய அரசுத் துறைகள் எடப்பாடி பழனிச்சாமிக்கு கடிதம் எழுதுவது குறித்த கேள்விக்கு,
”அது மாதிரியில்லை. இந்தியத் தேர்தல் ஆணையத்தின் முடிவைத் தான் மத்திய அரசு ஏற்றுக்கொண்டுள்ளது. இதுவரை தேர்தல் ஆணையம் ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் மட்டுமே கடிதம் அனுப்பி உள்ளது. வேறு எந்த முடிவும் அல்ல. இது குறித்து தவறான தகவல்களைச் சிலர் அளிக்கின்றனர். தேர்தல் ஆணையம் மட்டுமல்ல வெளியிலும் பல்வேறு குளறுபடிகளைச் செயற்கையாகச் சிலரால் உருவாக்கப்பட்டுள்ளது. பொதுச்செயலாளர் எனக்குறிப்பிட்டு ஈபிஎஸ்க்கு கடிதம் வருவது குறித்த கேள்விக்கு,அது தவறான தகவல். பல்வேறு குளறுபடிகளைச் செயற்கையாக உருவாக்குகிறார்கள்” எனத் தெரிவித்தார்.
மேலும், சட்டமன்ற உறுப்பினர் ஆதரவுப்படி ஈபிஎஸ்க்கு கடிதம் வருவதாகக் கூறுவது,
“அப்படி எந்த தகவலும் அதிகாரப்பூர்வமாக இல்லை. தமிழக விவசாயிகள் இந்த வருடமும் பொங்கல பரிசாக கரும்பு வழங்குவார்கள் என்று எண்ணித் தான் கரும்பை பயிரிட்டார்கள், அதை ஏற்றுத் தமிழக அரசு முடிவு எடுத்துள்ளது”.
தமிழக அரசு 5 ஆயிரம் பொங்கல் பரிசு வழங்க வேண்டும் என்பது குறித்த கேள்விக்கு,
”நான் தான் 5000ரூபாய் கொடுக்க வேண்டும் என முதலில் சொன்னேன்”.
செய்தியாளரிடம் நீங்க எந்த சேனல் எனக் கேட்டு சிரித்துக் கொண்டே சென்றுவிட்டார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
https://ift.tt/wquhEPoஈபிஎஸ்க்கு பொதுச்செயலாளர் எனக் கடிதம் ! செயற்கையாக பல்வேறு குளறுபடிகளை உருவாக்குவதாக ஓ.பன்னீர்செல்வம் விமர்சனம். பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் மறைவுக்கு நேரில் சென்று இரங்கல் தெரிவிக்கும் வகையில், டெல்லி செல்வதற்காக மதுரை விமான நிலையம் வந்த அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒ பன்னீர்செல்வம் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ஒ பன்னீர்செல்வம்,
மாநில தேர்தல் ஆணையம் கடிதம் கொடுத்திருப்பது குறித்த கேள்விக்கு,
”அதிமுகவின் சட்ட விதிகளின்படி, தொண்டர்கள் இணைந்து கழக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்று தான் அறிவிக்கப்பட்டுள்ளது. அது தான் உண்மை. ஒருங்கிணைப்பாளராக நானும் இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியும் தான் இருந்தோம். தற்போதுவரை முறைப்படி இந்தியத் தேர்தல் ஆணையம் இன்று வரை அப்படித்தான் கடிதம் அனுப்பி உள்ளது. இடையில் பல்வேறு பிரச்சனைகளைச் செயற்கையாக உருவாக்கினார்கள்”
மத்திய அரசுத் துறைகள் எடப்பாடி பழனிச்சாமிக்கு கடிதம் எழுதுவது குறித்த கேள்விக்கு,
”அது மாதிரியில்லை. இந்தியத் தேர்தல் ஆணையத்தின் முடிவைத் தான் மத்திய அரசு ஏற்றுக்கொண்டுள்ளது. இதுவரை தேர்தல் ஆணையம் ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் மட்டுமே கடிதம் அனுப்பி உள்ளது. வேறு எந்த முடிவும் அல்ல. இது குறித்து தவறான தகவல்களைச் சிலர் அளிக்கின்றனர். தேர்தல் ஆணையம் மட்டுமல்ல வெளியிலும் பல்வேறு குளறுபடிகளைச் செயற்கையாகச் சிலரால் உருவாக்கப்பட்டுள்ளது. பொதுச்செயலாளர் எனக்குறிப்பிட்டு ஈபிஎஸ்க்கு கடிதம் வருவது குறித்த கேள்விக்கு,அது தவறான தகவல். பல்வேறு குளறுபடிகளைச் செயற்கையாக உருவாக்குகிறார்கள்” எனத் தெரிவித்தார்.
மேலும், சட்டமன்ற உறுப்பினர் ஆதரவுப்படி ஈபிஎஸ்க்கு கடிதம் வருவதாகக் கூறுவது,
“அப்படி எந்த தகவலும் அதிகாரப்பூர்வமாக இல்லை. தமிழக விவசாயிகள் இந்த வருடமும் பொங்கல பரிசாக கரும்பு வழங்குவார்கள் என்று எண்ணித் தான் கரும்பை பயிரிட்டார்கள், அதை ஏற்றுத் தமிழக அரசு முடிவு எடுத்துள்ளது”.
தமிழக அரசு 5 ஆயிரம் பொங்கல் பரிசு வழங்க வேண்டும் என்பது குறித்த கேள்விக்கு,
”நான் தான் 5000ரூபாய் கொடுக்க வேண்டும் என முதலில் சொன்னேன்”.
செய்தியாளரிடம் நீங்க எந்த சேனல் எனக் கேட்டு சிரித்துக் கொண்டே சென்றுவிட்டார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்