உலகக் கோப்பை கால்பந்து தொடரில் மொராக்கோ அணியை வீழ்த்திய பிரான்ஸ் அணி இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றுள்ளது.
கத்தாரில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை கால்பந்து போட்டிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. நேற்று நடைபெற்ற 2ஆவது அரையிறுதி போட்டியில் மொராக்கோ அணியுடன் நடப்பு சாம்பியன் பிரான்ஸ் விளையாடியது. உலகக் கோப்பை கால்பந்து வரலாற்றில் அரையிறுதிக்கு முன்னேறிய முதல் ஆப்ரிக்க மற்றும் அரபு அணி என்ற பெருமையுடன் மொராக்கோ களமிறங்கியது. மெஸ்ஸி, அல்வாரஸ் போன்ற நட்சத்திர வீரர்கள் பட்டாளத்துடன் அர்ஜென்டினா களமிறங்கியது.
ஆட்டம் தொடங்கிய 5ஆம் நிமிடத்திலேயே பிரான்சின் தியோ ஃபெர்னான்டஸ் முதல் கோலை திணித்து முன்னிலை பெற்றுத்தந்தார். மொராக்கோ வீரர்கள் சளைக்காமல் வேகம் காட்டியதால் ஆட்டத்தில் அனல் பறந்தது. ஆட்டத்தின் 79ஆவது நிமிடத்தில் பிரான்சின் கொலோ முவானி மற்றுமொரு கோலை திணித்து தனது அணியை வலுவான முன்னிலைக்கு கொண்டுசென்றார். ஆட்ட முடிவில் பிரான்ஸ் 2 - 0 என்ற கோல்க்கணக்கில் வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றது.
ஞாயிறன்று(18-12-22) நடைபெறும் இறுதிப்போட்டியில் அர்ஜென்டினாவை பிரான்ஸ் சந்திக்கிறது. இறுதிப்போட்டியில் பிரான்ஸ் வெல்லும் பட்சத்தில் இத்தாலி, பிரேசிலுக்கு பிறகு தொடர்ச்சியாக 2 முறை உலகக்கோப்பையை வெல்லும் 3ஆவது அணி என்ற பெருமையை பெறும். பிரான்ஸ், அர்ஜென்டினா இரு அணிகளும் சம பலம் படைத்தவையாக இருப்பதால் கால்பந்து ரசிகர்கள் பெரும் விருந்திற்காக காத்துள்ளனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
https://ift.tt/9dVYRBTஉலகக் கோப்பை கால்பந்து தொடரில் மொராக்கோ அணியை வீழ்த்திய பிரான்ஸ் அணி இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றுள்ளது.
கத்தாரில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை கால்பந்து போட்டிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. நேற்று நடைபெற்ற 2ஆவது அரையிறுதி போட்டியில் மொராக்கோ அணியுடன் நடப்பு சாம்பியன் பிரான்ஸ் விளையாடியது. உலகக் கோப்பை கால்பந்து வரலாற்றில் அரையிறுதிக்கு முன்னேறிய முதல் ஆப்ரிக்க மற்றும் அரபு அணி என்ற பெருமையுடன் மொராக்கோ களமிறங்கியது. மெஸ்ஸி, அல்வாரஸ் போன்ற நட்சத்திர வீரர்கள் பட்டாளத்துடன் அர்ஜென்டினா களமிறங்கியது.
ஆட்டம் தொடங்கிய 5ஆம் நிமிடத்திலேயே பிரான்சின் தியோ ஃபெர்னான்டஸ் முதல் கோலை திணித்து முன்னிலை பெற்றுத்தந்தார். மொராக்கோ வீரர்கள் சளைக்காமல் வேகம் காட்டியதால் ஆட்டத்தில் அனல் பறந்தது. ஆட்டத்தின் 79ஆவது நிமிடத்தில் பிரான்சின் கொலோ முவானி மற்றுமொரு கோலை திணித்து தனது அணியை வலுவான முன்னிலைக்கு கொண்டுசென்றார். ஆட்ட முடிவில் பிரான்ஸ் 2 - 0 என்ற கோல்க்கணக்கில் வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றது.
ஞாயிறன்று(18-12-22) நடைபெறும் இறுதிப்போட்டியில் அர்ஜென்டினாவை பிரான்ஸ் சந்திக்கிறது. இறுதிப்போட்டியில் பிரான்ஸ் வெல்லும் பட்சத்தில் இத்தாலி, பிரேசிலுக்கு பிறகு தொடர்ச்சியாக 2 முறை உலகக்கோப்பையை வெல்லும் 3ஆவது அணி என்ற பெருமையை பெறும். பிரான்ஸ், அர்ஜென்டினா இரு அணிகளும் சம பலம் படைத்தவையாக இருப்பதால் கால்பந்து ரசிகர்கள் பெரும் விருந்திற்காக காத்துள்ளனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்