“முதலில் ஓ.பன்னீர்செல்வம் பக்கம் இருந்துவிட்டு, பின் எடப்பாடி பழனிச்சாமி பக்கம் போன சிவி சண்முகம், அரசியலை பற்றி பேச தகுதியில்லை. உதயநிதியை தனது கால்தூசுக்கு சமம் என்று கூறுவதை சிவி சண்முகம் நிறுத்தி கொள்ள வேண்டும்” என அமைச்சர் பொன்முடி எச்சரிக்கையாக தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் அருகேயுள்ள அத்தியூர் திருவாதியில் திமுகவை சார்ந்த மறைந்த பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் புகழேந்தி ஏற்பாட்டின் பேரில் 300 நபர்களுக்கு அரிசி வேட்டி சேலைகள் வழங்கபட்டன. இந்த நலத்திட்ட உதவி வழங்கும் விழாவில் உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி விழுப்புரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் லட்சுமணன் கலந்து கொண்டு வழங்கினர்.
அதனை தொடர்ந்து மேடையில் பேசிய அமைச்சர் பொன்முடி, “அமைச்சராக உள்ள உதயநிதியை 'என்னுடைய கால் தூசிக்கு சமம்’ என்று சிவி சண்முகம் கூறியிருக்க கூடாது. அரசியலுக்காக எதை வேண்டுமானாலும் பேச வேண்டும் என்று பேசகூடாது. முதலில் ஓ பன்னீர்செல்வக் பக்கம் இருந்துவிட்டு அப்பறம் எடப்பாடி பழனிச்சாமி பக்கம் போன இவரெல்லாம், அரசியலை பற்றி பேசதகுதியில்லை. பெரியார், அண்ணா, கலைஞர், தளபதி வழியில் செயல்பட்டு கொண்டிருக்கும் எங்களை தூண்டிவிட்டு வேடிக்கை பார்க்க வேண்டாம்” என பேசினார்.
உதயநிதியை விமர்சிக்க சி.வி.சண்முகத்திற்கு என்ன தகுதி இருக்கிறது? - அமைச்சர் பொன்முடி #UdhayanidhiStalin |#MKStalin | #Ponmudi | #DMK | #CVShanmugam pic.twitter.com/nARuZQzoqS
— PuthiyathalaimuraiTV (@PTTVOnlineNews) December 26, 2022
தொடர்ந்து பேசிய அவர், “திமுகவில் அரசியலில் ஈடுபாடு கொண்ட வாரிசுகள் அரசியலுக்கு வருவதில் தவறில்லை. 10 சதவிகித வாரிசுகள் திமுகவில் அரசியலில் இருப்பதில் தவறில்லை. உதயநிதியை தனது கால்தூசுக்கு சமம் என்பதை கூறும் முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் அதனை நிறுத்தி கொள்ள வேண்டும். சிவி சண்முகத்தின் தந்தை, எம்.ஜி.ஆர் ஆட்சிக்காலத்தில் அதிமுக-வில் முக்கிய பொறுப்பாளராகவும், எம்.பி யாகவும் இருந்தவர். இவரே வாரிசுதான்.
ஊரை ஏமாற்றி விட்டு மாநிலங்களவை உறுப்பினர் பதவியில் அமைந்திருக்கும் சிவி சண்முகம், தன்னுடன் இருந்த லட்சுமணனை கூட ஒன்றாக வைத்திருக்க தெரியாத நபர். யாரையும் மதிக்க தெரியாத அவருக்கு விரைவில் விழுப்புரம் மாவட்ட திமுக பதில் சொல்ல வேண்டிய விதத்தில் சொல்லும்.
உதயநிதியை ஏன் இவ்வளவு சீக்கிரம் அமைச்சராக்க வேண்டும் என்று சிலர் கேட்கிறார்கள். உண்மையில் ஒன்றரை வருடங்கள் கழித்தே உதயநிதியை அமைச்சராக்கியுள்ளார் முதல்வர். நானெல்லாம் உள்ளே நுழைந்தபோதே எனக்கு அமைச்சர் பதவி கொடுத்தவர் கலைஞர். ஆனால் உதயநிதிக்கு தாமதமாகவே அப்பதவி கிடைத்துள்ளது. உதயநிதியை சிறுவயதிலிருந்தே எனக்கு தெரியும். பெரியாரின் கொள்கைகளை கொண்டவர் அவர். இளைஞர்களிடம் அன்பாக பழகக்கூடியவர். மிகச்சிறந்த விளையாட்டு வீரர். எல்லோருக்கும் நல்லது செய்யவேண்டும் என நினைப்பவர்.
நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் நாங்களெல்லாம் வெற்றிபெற்றோமென்றால், அதற்கு உதயநிதியின் பிரசாரமும் முக்கிய காரணம். சட்டமன்ற எம்.எல்.ஏ தேர்தலில் நாங்களெல்லாம் வெற்றி பெற்றோமென்றால், அதற்கு முழு முழு காரணம் உதயநிதியின் பிரசாரம். அப்படிப்பட்டவருக்கு முதலிலேயே அமைச்சர் பதவி கொடுத்திருக்கலாம். ஒன்றரை வருடம் தாமதாகிவிட்டது” என தெரிவித்தார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
https://ift.tt/hmpOFsb“முதலில் ஓ.பன்னீர்செல்வம் பக்கம் இருந்துவிட்டு, பின் எடப்பாடி பழனிச்சாமி பக்கம் போன சிவி சண்முகம், அரசியலை பற்றி பேச தகுதியில்லை. உதயநிதியை தனது கால்தூசுக்கு சமம் என்று கூறுவதை சிவி சண்முகம் நிறுத்தி கொள்ள வேண்டும்” என அமைச்சர் பொன்முடி எச்சரிக்கையாக தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் அருகேயுள்ள அத்தியூர் திருவாதியில் திமுகவை சார்ந்த மறைந்த பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் புகழேந்தி ஏற்பாட்டின் பேரில் 300 நபர்களுக்கு அரிசி வேட்டி சேலைகள் வழங்கபட்டன. இந்த நலத்திட்ட உதவி வழங்கும் விழாவில் உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி விழுப்புரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் லட்சுமணன் கலந்து கொண்டு வழங்கினர்.
அதனை தொடர்ந்து மேடையில் பேசிய அமைச்சர் பொன்முடி, “அமைச்சராக உள்ள உதயநிதியை 'என்னுடைய கால் தூசிக்கு சமம்’ என்று சிவி சண்முகம் கூறியிருக்க கூடாது. அரசியலுக்காக எதை வேண்டுமானாலும் பேச வேண்டும் என்று பேசகூடாது. முதலில் ஓ பன்னீர்செல்வக் பக்கம் இருந்துவிட்டு அப்பறம் எடப்பாடி பழனிச்சாமி பக்கம் போன இவரெல்லாம், அரசியலை பற்றி பேசதகுதியில்லை. பெரியார், அண்ணா, கலைஞர், தளபதி வழியில் செயல்பட்டு கொண்டிருக்கும் எங்களை தூண்டிவிட்டு வேடிக்கை பார்க்க வேண்டாம்” என பேசினார்.
உதயநிதியை விமர்சிக்க சி.வி.சண்முகத்திற்கு என்ன தகுதி இருக்கிறது? - அமைச்சர் பொன்முடி #UdhayanidhiStalin |#MKStalin | #Ponmudi | #DMK | #CVShanmugam pic.twitter.com/nARuZQzoqS
— PuthiyathalaimuraiTV (@PTTVOnlineNews) December 26, 2022
தொடர்ந்து பேசிய அவர், “திமுகவில் அரசியலில் ஈடுபாடு கொண்ட வாரிசுகள் அரசியலுக்கு வருவதில் தவறில்லை. 10 சதவிகித வாரிசுகள் திமுகவில் அரசியலில் இருப்பதில் தவறில்லை. உதயநிதியை தனது கால்தூசுக்கு சமம் என்பதை கூறும் முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் அதனை நிறுத்தி கொள்ள வேண்டும். சிவி சண்முகத்தின் தந்தை, எம்.ஜி.ஆர் ஆட்சிக்காலத்தில் அதிமுக-வில் முக்கிய பொறுப்பாளராகவும், எம்.பி யாகவும் இருந்தவர். இவரே வாரிசுதான்.
ஊரை ஏமாற்றி விட்டு மாநிலங்களவை உறுப்பினர் பதவியில் அமைந்திருக்கும் சிவி சண்முகம், தன்னுடன் இருந்த லட்சுமணனை கூட ஒன்றாக வைத்திருக்க தெரியாத நபர். யாரையும் மதிக்க தெரியாத அவருக்கு விரைவில் விழுப்புரம் மாவட்ட திமுக பதில் சொல்ல வேண்டிய விதத்தில் சொல்லும்.
உதயநிதியை ஏன் இவ்வளவு சீக்கிரம் அமைச்சராக்க வேண்டும் என்று சிலர் கேட்கிறார்கள். உண்மையில் ஒன்றரை வருடங்கள் கழித்தே உதயநிதியை அமைச்சராக்கியுள்ளார் முதல்வர். நானெல்லாம் உள்ளே நுழைந்தபோதே எனக்கு அமைச்சர் பதவி கொடுத்தவர் கலைஞர். ஆனால் உதயநிதிக்கு தாமதமாகவே அப்பதவி கிடைத்துள்ளது. உதயநிதியை சிறுவயதிலிருந்தே எனக்கு தெரியும். பெரியாரின் கொள்கைகளை கொண்டவர் அவர். இளைஞர்களிடம் அன்பாக பழகக்கூடியவர். மிகச்சிறந்த விளையாட்டு வீரர். எல்லோருக்கும் நல்லது செய்யவேண்டும் என நினைப்பவர்.
நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் நாங்களெல்லாம் வெற்றிபெற்றோமென்றால், அதற்கு உதயநிதியின் பிரசாரமும் முக்கிய காரணம். சட்டமன்ற எம்.எல்.ஏ தேர்தலில் நாங்களெல்லாம் வெற்றி பெற்றோமென்றால், அதற்கு முழு முழு காரணம் உதயநிதியின் பிரசாரம். அப்படிப்பட்டவருக்கு முதலிலேயே அமைச்சர் பதவி கொடுத்திருக்கலாம். ஒன்றரை வருடம் தாமதாகிவிட்டது” என தெரிவித்தார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்