Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

ரூ.5,000 லஞ்சம் வாங்கிய மின்வாரிய ஊழியருக்கு 5 ஆண்டு சிறை!

புதுக்கோட்டை மாவட்டத்தில் வணிகரிடம் ரூ.5,000 லஞ்சம் வாங்கிய மின் வாரிய வணிக ஆய்வாளருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து புதுக்கோட்டை மாவட்ட முதன்மை குற்றவியல் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடியைச் சேர்ந்தவர் கல்யாணசுந்தரம். வணிகரான இவரது பழைய கடையில் இருந்த மின் மீட்டரை புதுக் கடைக்கு மாற்றித் தருமாறு கடந்த 2009 ம் ஆண்டு மணமேல்குடி மின்வாரிய அலுவலகத்தில் மனு அளித்துள்ளார். அதன்மீது நடவடிக்கை எடுக்க மணமேல்குடி மின்வாரிய அலுவலகத்தின் அப்போதைய வணிக ஆய்வாளராக பணிபுரிந்த சண்முகசுந்தரம்  ரூ.5 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார்.

image

இதைத்தொடர்ந்து கல்யாணசுந்தரம் புதுக்கோட்டை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு போலீஸாரிடம் புகார் அளித்தார். அதன் பேரில் கல்யாணசுந்தரத்திடம் இருந்து ரூ.5 ஆயிரம் பெற முயல்கையில், சண்முகசுந்தரத்தை ஊழல் தடுப்பு போலீஸார் கைது செய்தனர்.

image

இந்த வழக்கு புதுக்கோட்டை தலைமைக் குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது. வழக்கு  விசாரணை முடிந்து நேற்று தீர்ப்பை வழங்கிய நீதிபதி ஜெயக்குமாரி ஜெமி ரெத்னா, குற்றம் சாட்டப்பட்ட சண்முகசுந்தரத்துக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்தார். இதனையடுத்து சண்முகசுந்தரத்தை போலீசார் அழைத்துச் சென்று திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

https://ift.tt/kboH7xY

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

கருத்துரையிடுக

0 கருத்துகள்