பஸ், ட்ரெயின் டிக்கெட், ஏன் எடை மிஷின்ல வந்த டிக்கெட் என பலவற்றையும் சேமித்து வைக்கும் பழக்கம் உடையவர்களை கண்டிருப்போம். இது போல சின்ன பொருளாகவும், பெரிய அளவில் கார், பைக்குகளை வாங்கி குவிப்பதை ஹாபியாக கொண்டிருப்பதையும் கேள்விப்பட்டிருப்பீர்கள்.
ஆனால் குறிப்பிட்ட பிராண்ட்டில் நூற்றுக்கணக்கான காலணிகளை வாங்கி குவிப்பதையே வேலையாக கொண்டிருந்திருக்கிறார் அமெரிக்காவைச் சேர்ந்த ரோஷெல் என்ற பெண். தன்னுடைய மூட்டு வலிக்காக பிரபல காலணி பிராண்டான க்ராக்ஸின் பப்புள் ஷுஸ் வாங்கியிருக்கிறார்.
காலப்போக்கில் க்ராக்ஸ் பிராண்ட் செருப்புகள் தனக்கு ரொம்பவே சவுகரியத்தை கொடுத்ததால் இதுவரைக்கும் 450 ஜோடி க்ராக்ஸ் செருப்பு கலெக்ஷனை வாங்கி வீட்டில் மியூசியம் போல அடுக்கியிருக்கிறார் ரோஷெல்.
மிரர் செய்தி தளத்தின் கூற்றுப்படி, 2000ம் ஆண்டில்தான் முதல் முதலாக ரோஷெல் இந்த க்ராக்ஸ் ரக ஷூக்களை வாங்கியதாகவும், அவருடைய காலுக்கு சரியாக பொருந்துவதால் கிட்டத்தட்ட 22 ஆண்டுகளாக க்ராக்ஸ் ரக காலணிகளையே அணிந்து வருகிறாராம். க்ராக்ஸ் காலணிகளுக்கு ஏற்றார் போல சாக்ஸும் அணிந்துக்கொள்வாராம்.
இது குறித்து பேசியுள்ள ரோஷெல், “க்ராக்ஸ் செருப்பு, ஷுக்களை அணிவது ரொம்பவே பிடித்திருக்கிறது. க்ராக்ஸ் ரக காலணிகளை சுலபமாக பராமரித்துக்கொள்ள முடிகிறது. என்னுடைய பெர்சனாலிட்டிக்கும் அது பொருந்துகிறது. க்ராக்ஸ் அணியும் போது சந்தோஷமாக இருக்கிறது. துடிப்பான என்னுடைய தனித்தன்மை க்ராக்ஸ் அணிவதால் எதிரொலிக்கிறது” என்றுக் கூறியிருக்கிறார்.
ரோஷெல் மட்டுமல்லாமல் அவருடைய பெற்றோரும் க்ராக்ஸ் பிராண்ட் காலணிகளை அணிவதையே வழக்கமாக கொண்டிருக்கிறார்கள். மகளுக்கு இணையாக ரோஷெலின் தாயாரிடமும் 300 ஜோடி க்ராக்ஸ் கலெக்ஷன்ஸ் இருக்கிறதாம்.
முன்னதாக கனடாவைச் சேர்ந்த பெண் ஒருவர், தன்னிடம் 144 ஜோடி க்ராக்ஸ் செருப்புகள் இருப்பதால் அவர் தன்னை க்ராக்ஸ் குயின் என்றே அழைத்துக் கொண்டதாக கடந்த மார்ச் மாதம் செய்தி வெளியானது. தற்போது அமெரிக்காவின் ரோஷெல் 450 ஜோடி க்ராக்ஸ் காலணிகள் வைத்திருப்பது குறித்த போட்டோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி பலரது வியப்பில் ஆழ்த்தியிருக்கிறது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்