தமிழக அமைச்சராக பதவியேற்றார் உதயநிதி ஸ்டாலின்.
தமிழக அமைச்சரவையில் 35-வது நபராக பதவியேற்றார் உதயநிதி ஸ்டாலின். அவருக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்துள்ளார். உதயநிதி ஸ்டாலினுக்கு, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
முதலமைச்சர் உள்பட 34 அமைச்சர்கள் உள்ள நிலையில் 35 வது அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்றார். பதவியேற்ற கையோடு, ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் மு.க.ஸ்டாலின் ஆகியோரிடம் பூங்கொத்து பெற்று வாழ்த்து பெற்றார் அமைச்சர் உதயநிதி. நிகழ்ச்சி நடைபெற்றா தர்பார் மண்டபத்தில் சுமார் 150 இருக்கைகள் போடப்பட்டிருந்தது. சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி உட்பட நீதிபதிகள் மற்றும் கூடுதல் தலைமைச் செயலாளர் அந்தஸ்தில் உள்ளவர்கள், முக்கிய பிரமுகஸ்தர்கள் & அவர் குடும்பத்தினர்கள் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.
பதவியேற்கும் முன் உதயநிதி ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள இல்லத்தில், தனது தந்தையும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலினிடமும், தாய் துர்கா ஸ்டாலினிடமும் ஆசிபெற்றார்.
தொடர்ந்து, புதிதாக பொறுப்பேற்ற அமைச்சர் உதயநிதி உட்பட தமிழகத்தின் 35 அமைச்சர்களும் ஆளுநர் ஆர்.என்.ரவியுடன் இணைந்து புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.
சுமார் 12 நிமிடங்களுக்குள் இந்நிகழ்வு நடந்து முடிந்தது. இதுகுறித்து உதயநிதி தனது ஃபேஸ்புக் பதிவில், ''எப்போதும் வழிநடத்தும் மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களிடம், சமூகநீதி திட்டங்களை செயல்படுத்தி தமிழர் நலன் காக்கும் திராவிட மாடல் அரசின் அமைச்சரவையில் பங்கேற்க வாய்ப்பளித்ததற்கு நன்றி தெரிவித்து வாழ்த்து பெற்றேன். பதவியாக கருதாமல் பொறுப்பாக உணர்ந்து என்றும் பணியாற்றிடுவேன்'' என்று பதிவிட்டுள்ளார்.
தவற விடாதீர்: சினிமா டூ அரசியல்... இன்று அமைச்சர் பதவியேற்கும் உதயநிதி ஸ்டாலின் கடந்து வந்த பாதை!
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
https://ift.tt/rvz4wHSதமிழக அமைச்சராக பதவியேற்றார் உதயநிதி ஸ்டாலின்.

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்