திருச்சி,கோவை, மதுரை, சென்னை, உள்ளிட்ட விமான நிலையங்கள் குத்தகைக்கு விடப்பட்டுள்ளதாக இந்திய விமான போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்துடன் நடைபெற்று வரும் நிலையில் மக்களவையில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளித்துள்ள மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சகம், NMP திட்டத்தின் படி, இந்தியாவின் விமான நிலையங்களான புவனேஷ்வர், வாரணாசி, அமிர்தசரஸ், திருச்சி, இந்தூர்,ராய்ப்பூர், கோழிக்கோடு, கோயம்புத்தூர், நாக்பூர், பாட்னா, மதுரை, சூரத், ராஞ்சி, ஜோத்பூர், சென்னை, விஜயவாடா, வதோதரா, போபால், திருப்பதி, ஹூப்ளி, இம்பால், அகர்தலா,உதய்பூர், டேராடூன் மற்றும் ராஜமுந்திரி ஆகிய 25 விமான நிலையங்கள் 2022 முதல் 2025 வரை குத்தகைக்கு ஒதுக்கப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் (டிஐஏஎல்), சத்ரபதி சிவாஜி மகராஜ் சர்வதேச விமான நிலையம் மும்பை (எம்ஐஏஎல்), சவுத்ரி சரண் சிங் சர்வதேச விமான நிலையம், லக்னோ (எல்ஐஏஎல்),சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையம், அகமதாபாத் (ஏஐஏஎல்), மங்களூரு சர்வதேச விமான நிலையம், (எம்ஏஐஏஎல்),ஜோத்பூர் சர்வதேச விமான நிலையம், (ஜேஐஏஎல்),லோக்ப்ரியா கோபிநாத் போடோலோய் சர்வதேச விமான நிலையம், குவஹாத்தி (ஜிஐஏஎல்),திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையம் குவஹாத்தி (டிஐஏஎல்) ஆகிய 8 விமான நிலையங்களில் ஒப்பந்த அடிப்படையில் பொது - தனியார் பங்களிப்புடன் (பிபிபி) மேம்பாட்டு மற்றும் நிர்வாகப் பணிகளை மேற்கொள்ளவும் குத்தகை ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விமான நிலையங்களை குத்தகைக்கு விடுவதன் மூலம் ஈட்டும் வருவாயை, நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்களில் உள்கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டுப் பணிகளுக்கு பயன்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
https://ift.tt/FhCOZdwதிருச்சி,கோவை, மதுரை, சென்னை, உள்ளிட்ட விமான நிலையங்கள் குத்தகைக்கு விடப்பட்டுள்ளதாக இந்திய விமான போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்துடன் நடைபெற்று வரும் நிலையில் மக்களவையில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளித்துள்ள மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சகம், NMP திட்டத்தின் படி, இந்தியாவின் விமான நிலையங்களான புவனேஷ்வர், வாரணாசி, அமிர்தசரஸ், திருச்சி, இந்தூர்,ராய்ப்பூர், கோழிக்கோடு, கோயம்புத்தூர், நாக்பூர், பாட்னா, மதுரை, சூரத், ராஞ்சி, ஜோத்பூர், சென்னை, விஜயவாடா, வதோதரா, போபால், திருப்பதி, ஹூப்ளி, இம்பால், அகர்தலா,உதய்பூர், டேராடூன் மற்றும் ராஜமுந்திரி ஆகிய 25 விமான நிலையங்கள் 2022 முதல் 2025 வரை குத்தகைக்கு ஒதுக்கப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் (டிஐஏஎல்), சத்ரபதி சிவாஜி மகராஜ் சர்வதேச விமான நிலையம் மும்பை (எம்ஐஏஎல்), சவுத்ரி சரண் சிங் சர்வதேச விமான நிலையம், லக்னோ (எல்ஐஏஎல்),சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையம், அகமதாபாத் (ஏஐஏஎல்), மங்களூரு சர்வதேச விமான நிலையம், (எம்ஏஐஏஎல்),ஜோத்பூர் சர்வதேச விமான நிலையம், (ஜேஐஏஎல்),லோக்ப்ரியா கோபிநாத் போடோலோய் சர்வதேச விமான நிலையம், குவஹாத்தி (ஜிஐஏஎல்),திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையம் குவஹாத்தி (டிஐஏஎல்) ஆகிய 8 விமான நிலையங்களில் ஒப்பந்த அடிப்படையில் பொது - தனியார் பங்களிப்புடன் (பிபிபி) மேம்பாட்டு மற்றும் நிர்வாகப் பணிகளை மேற்கொள்ளவும் குத்தகை ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விமான நிலையங்களை குத்தகைக்கு விடுவதன் மூலம் ஈட்டும் வருவாயை, நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்களில் உள்கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டுப் பணிகளுக்கு பயன்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்