சபரிமலையில் இந்த ஆண்டு மண்டலம் மற்றும் மகர விளக்கு பூஜைக்காக நடை திறக்கப்பட்ட கடந்த 23 நாட்களில் இதுவரை 13 லட்சம் கடந்து பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். அலைமோதும் பக்தர்கள் கூட்டத்தால் திணறி வருகிறது சபரிமலை.
சபரிமலையில் இந்த ஆண்டு மண்டலம் மற்றும் மகர விளக்கு பூஜைக்காக நவம்பர் 16ஆம் தேதி நடை திறக்கப்பட்டது. தினசரி சராசரியாக 50 முதல் 70 ஆயிரத்திற்கும் அதிகமான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். அதிகபட்சமாக கடந்த நவம்பர் 28ஆம் தேதி 84 ஆயிரம் பேரும், டிசம்பர் 5ம் தேதி 82 ஆயிரம் நவம்பர் 26ம் தேதி 78 ஆயிரம் பேரும் தரிசனம் செய்திருந்தனர்.
சபரிமலையில் நேற்று (வியாழக்கிழமை) அதிகபட்சமாக 96 ஆயிரத்து 30 பேர் தரிசனத்திற்காக முன்பதிவு செய்ததில் இரவு 8 மணி வரை தரிசனம் செய்தவர் எண்ணிக்கை 80 ஆயிரம் கடந்தது. சபரிமலையில் இந்த ஆண்டு நடை திறக்கப்பட்ட நவம்பர் 16ம் தேதி முதல் இன்று வரையிலான 23 நாட்களில் 14 லட்சத்து 91 ஆயிரத்து 321 பேர் தரிசனத்திற்காக முன்பதிவு செய்துள்ளனர். அவர்களில் இதுவரை 13 லட்சத்து 14 ஆயிரத்து 696 பேர் தரிசனம் செய்துள்ளனர்.
தொடர்ந்து அலைமோதும் பக்தர்கள் கூட்டத்தால் சபரிமலை திணறி வருகிறது. பக்தர்களின் பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகள் கேரளா அரசு துறைகள் மற்றும் திருவிதாங்கூர் தேவஸ்தான்போர்டு சார்பில் முடுக்கி விடப்பட்டுள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
https://ift.tt/zJ9GRqxசபரிமலையில் இந்த ஆண்டு மண்டலம் மற்றும் மகர விளக்கு பூஜைக்காக நடை திறக்கப்பட்ட கடந்த 23 நாட்களில் இதுவரை 13 லட்சம் கடந்து பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். அலைமோதும் பக்தர்கள் கூட்டத்தால் திணறி வருகிறது சபரிமலை.
சபரிமலையில் இந்த ஆண்டு மண்டலம் மற்றும் மகர விளக்கு பூஜைக்காக நவம்பர் 16ஆம் தேதி நடை திறக்கப்பட்டது. தினசரி சராசரியாக 50 முதல் 70 ஆயிரத்திற்கும் அதிகமான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். அதிகபட்சமாக கடந்த நவம்பர் 28ஆம் தேதி 84 ஆயிரம் பேரும், டிசம்பர் 5ம் தேதி 82 ஆயிரம் நவம்பர் 26ம் தேதி 78 ஆயிரம் பேரும் தரிசனம் செய்திருந்தனர்.
சபரிமலையில் நேற்று (வியாழக்கிழமை) அதிகபட்சமாக 96 ஆயிரத்து 30 பேர் தரிசனத்திற்காக முன்பதிவு செய்ததில் இரவு 8 மணி வரை தரிசனம் செய்தவர் எண்ணிக்கை 80 ஆயிரம் கடந்தது. சபரிமலையில் இந்த ஆண்டு நடை திறக்கப்பட்ட நவம்பர் 16ம் தேதி முதல் இன்று வரையிலான 23 நாட்களில் 14 லட்சத்து 91 ஆயிரத்து 321 பேர் தரிசனத்திற்காக முன்பதிவு செய்துள்ளனர். அவர்களில் இதுவரை 13 லட்சத்து 14 ஆயிரத்து 696 பேர் தரிசனம் செய்துள்ளனர்.
தொடர்ந்து அலைமோதும் பக்தர்கள் கூட்டத்தால் சபரிமலை திணறி வருகிறது. பக்தர்களின் பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகள் கேரளா அரசு துறைகள் மற்றும் திருவிதாங்கூர் தேவஸ்தான்போர்டு சார்பில் முடுக்கி விடப்பட்டுள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்