Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

அன்று OFFLINE, இன்று ONLINE: மோசமடைந்து வரும் பெண் நிருபர்களின் நிலை! அதிர்ச்சி ரிப்போர்ட்

உலகளவில் பத்திரிகை சுதந்திரம் அச்சுறுத்தலுக்கு ஆளாகிவரும் சூழலில், தற்போது பெண் பத்திரிகையாளர்களுக்கு எதிரான ஆன்லைன் வன்முறையும், பெண் நிருபர்கள் கொலை செய்யப்படுவதும் அதிகரித்து வருகிறது என யுனஸ்கோ வெளியிட்டுள்ள ’தி சில்லிங் ‘ஆய்வு அறிக்கை தெரிவித்துள்ளது.

பத்திரிகையாளர்களுக்கான சர்வதேச மையம் (ICFJ) மற்றும் ஷெஃபீல்ட் பல்கலைக்கழகம் ஆகியவற்றின் ஆய்வின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட இந்த ’ தி சில்லிங்’ என பெயரிடப்பட்ட அறிக்கை, வளர்ந்துவரும் டிஜிட்டல் யுகத்தில் பெண் பத்திரிகையாளர்கள் எதிர்கொள்ளும் சவால்களை வரைபடமாகியுள்ளது.

உலக நாடுகளிலிருந்து 1000 பெண் நிருபர்களிடம் கணக்கெடுக்கப்பட்ட சர்வே முடிவில், முக்கால்வாசி பெண்கள் தங்கள் பணியின் போது சமூக வலைதளங்களில் பாலியல் வன்முறையும், மரண அச்சுறுத்தல்கள் உட்பட உடல் ரீதியான வன்முறையும், ஆபாச மற்றும் வெறுப்பு பேச்சுகளை அனுபவிப்பதாக ஆராய்ச்சி முடிவு சுட்டிக்காட்டியுள்ளது.

இவையெல்லாம் மட்டும்தான் உலகிலிருக்கும் வன்முறை என்று முடிந்துவிடாது. சக மனிதன் மீது நிகழ்த்தப்படும் இனவெறியும், ஓரினச்சேர்க்கையும், மாற்று மதம் வெறுப்பும் போன்றவைகளும் அடங்கும் அல்லவா?

அதேபோல்தான் பெண் என்பதாலும், அவள் மீடியாவில் பணிபுரிவதாலும் காட்டப்படும் பாரபட்சம் என்ற வன்முறையும். பெண்களுக்கு எதிரான குற்றங்களை நிகழ்த்துபவர்கள் மட்டுமில்லை, விமர்சன ரீதியாக பொதுமக்கள், பெண் நிருபர்களை மோசமாகவும் தரம் குறைவாக அணுகுவதும் இதில் அடங்கும்.

image

மேலும் பாலியல் குற்றங்களை வெளியில் சொல்லும் பெண்களை குற்றம் சாட்டுதல் மற்றும் அவமானப்படுத்துதல் போன்றவையும், அதன் தொடர்ச்சியான பின் விளைவுகளில் அப்பெண்கள் பணிநீக்கப்படுவதும் மற்ற நிறுவனங்களில் வேலை வாய்ப்பு குறைவதும் பெண் நிருபர்களுக்கு எதிரான குற்றங்களில் வலுவாக சேர்க்கப்பட வேண்டியதாக உள்ளது.

இந்த சர்வே எடுக்கப்பட்டவர்களில், கரோல் காட்வாலட்ர் என்ற பெண் நிருபரும் ஒருவர். இவர்தான் கோடிக்கணக்கான பேஸ்புக் பயனாளர்களின் தனிப்பட்ட தகவல்கள் பிரிட்டிஷ் ஆலோசனை நிறுவனமான கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகாவால் ரகசியமாக எப்படி அரசியல் விளம்பரங்களுக்காக சேகரிக்கப்பட்டது என்ற குற்றத்தை உலகிற்கு அமலப்படுத்தியவர்.

image

டிசம்பர் 2019 முதல் ஜனவரி 2021 வரையிலான இடைப்பட்ட காலத்தில் 10,400 தனித்தனி வன்முறைகளுக்கு கரோல் காட்வாலட்ர் ஆளாகியுள்ளார் என்பது இந்த ஆராய்ச்சி அறிக்கையில் சேர்க்கப்பட்டுள்ளது.

பாலினம், தொழில்முறை, தனிப்பட்ட வாழ்க்கை என்ற நிலைகளில் பெண் பத்திரிகையாளர்களை அவமானப்படுத்துவது, இழிவுபடுத்துவதற்கு ஆஃப்லைன் சமூகத்தில் நிகழ்ந்த அனைத்தும் தற்போது ஆன்லைனிலும் தொடர்ந்துகொண்டிருக்கிறது. தற்போது டிஜிட்டல் யுகம் அனைத்தையும் எளிமையாகிவிட்டதை போலவே பெண்களுக்கு எதிரான துன்புறுத்தல் மற்றும் அச்சுறுத்தல்களையும் சுலபமாக்கிவிட்டுள்ளது என்பது ஒரு துர்வஷ்டமான கொடுமை. அடையாளத்தை மறைத்துகொண்டு இயங்கலாம் என்ற கூடுதல் வசதி இருப்பதால், அனைத்து வக்கிரங்களும் நிகழ்த்தப்பட்டுக் கொண்டிருக்கிறது.

image

உலக அளவில் 1000 பெண் நிருபர்களிடம் எடுக்கபட்ட இந்த சர்வேயில், 25 % பெண் நிருபர்கள் மரண அச்சுறுத்தல்கள் உட்பட உடல்ரீதியான வன்முறையும், பாலியல் வன்முறையை 18% நிருபர்கள் எதிர்கொள்வதாகவும், குடும்பம், குழந்தைகள் போன்ற தங்களுக்கு நெருக்கமானவர்களுக்கு வரும் அச்சுறுத்தல்களில் 13% பேரும் எதிர்கொள்வதாக தெரிவித்துள்ளனர். ஆனால் கிட்டதட்ட 48% பேர், தேவையற்ற ஆன்லைன் துன்புறுத்தல்களை அனுபவிப்பதாக தெரிவித்துள்ளனர்.

ஒரு பெண் பத்திரிக்கையாளர் மட்டுமல்ல அனைத்து தரப்பு பெண்களின் பாதுகாப்பையும் உறுதி செய்யவேண்டியது இந்த சமூகத்தில் உள்ள ஒவ்வொவரின் கடமையும் தான். உண்மையை உலகிற்கு உரக்க சொல்லும் பெண் பத்திரிக்கையாளர்களின் பாதுகப்பு என்பது கூடுதலான முக்கியத்துவம் வாய்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

தி சில்லிங் ( The Chilling ) அறிக்கையின் லிங்க் - https://ift.tt/nta2iS7

இதையும் படியுங்கள் - 4 நாளுக்கு ஒரு பத்திரிகையாளர் கொல்லப்படுகிறார்!” - ஐ.நாவின் அதிர்ச்சி ரிப்போர்ட்!

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

https://ift.tt/1mFrtWq

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

கருத்துரையிடுக

0 கருத்துகள்