ஈ சாலா கம் நமதே என்று ராயல் சேலஞ்சர்ஸ் ரசிகர்கள் புலம்பவதுபோல் ஒவ்வொரு முறையும் 'It's coming home' என்று புலம்பிக் கொண்டே இருக்கிறார்கள். ஆனால், அதுவும் வருவதாகத் தெரியவில்லை. இம்முறையாவது தங்கள் அணி கோப்பையை வெல்லும் என்று நம்பிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களின் நம்பிக்கை பலிக்குமா! இந்தத் தொடரில் அந்த அணிக்கு இருக்கும் வாய்ப்புகள், பலம், பலவீனம் என்ன? அந்த அணியின் நம்பிக்கை யார்? விரிவாக பார்க்கலாம்.
பயிற்சியாளர்: கேரத் சவுத்கேட்
FIFA ரேங்கிங்: 5
2022 உலகக் கோப்பை பிரிவு: பி
பிரிவில் இருக்கும் அணிகள்: இரான், அமெரிக்கா, வேல்ஸ்
உலகக் கோப்பையில் இதுவரை:
இது இங்கிலாந்து அணி பங்குபெறும் 16-வது FIFA உலகக் கோப்பை. 1966ம் ஆண்டு இங்கிலாந்தில் உலகக் கோப்பை நடந்தபோது கடைசியாக அந்த அணி இத்தொடரை வென்றது. அதுதான் உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு இங்கிலாந்து முன்னேறிய ஒரு தொடர். அதைத் தவிர்த்து 1990, 2018 உலகக் கோப்பைகளில் அந்த அணி நான்காவது இடம் பிடித்தது. கால்பந்து உலகில் மிகப்பெரிய சக்தியாக இருந்தாலும் மொத்தமாகவே 3 முறை தான் அந்த அணி அரையிறுதிக்குள் நுழைந்திருக்கிறது. ரஷ்யாவில் நடந்த கடைசி உலகக் கோப்பையில் அந்த அணி நான்காவது இடம் பிடித்தது. அரையிறுதியில் குரோஷியாவிடம் தோற்ற இங்கிலாந்து, மூன்றாவது இடத்துக்கான போட்டியில் பெல்ஜியம் அணியிடம் தோற்றது.
தகுதிச் சுற்று செயல்பாடு:
வழக்கம்போல் 2022 உலகக் கோப்பை தகுதிச் சுற்றும் இங்கிலாந்துக்கு எளிதாகவே இருந்தது. 10 போட்டிகளில் ஒன்றில் கூட அந்த அணி தோற்கவே இல்லை. 8 வெற்றிகள், 2 டிரா என 26 புள்ளிகளுடன் தங்கள் பிரிவில் அந்த அனி முதலிடம் பிடித்தது. 10 போட்டிகளில் 39 கோல்கள் அடித்திருந்த அந்த அணி, வெறும் 3 கோல்கள் மட்டுமே விட்டது. அட்டாக், டிஃபன்ஸ் என அனைத்திலுமே சிறப்பாக செயல்பட்டது. ஹேரி கேன் அதிகபட்சமாக 12 கோல்கள் அடித்தார். 10 போட்டிகளில் மொத்தம் 17 வீரர்கள் கோலடித்து அசத்தினர். அட்டாக்கர்கள் மட்டுமல்லாமல், டிஃபண்டர்கள் பலரும் கோலடித்தனர். ஹேரி கேனுக்கு அடுத்து நான்கு கோல்களோடு இரண்டாவது டாப் ஸ்கோரரானதே டிஃபண்டர் மகுயர் தான்!
பயிற்சியாளர்:
கேரத் சவுத்கேட் பயிற்சியின் கீழ் கடந்த 6 ஆண்டுகளில் இங்கிலாந்து அணி நல்ல முன்னேற்றம் கண்டிருக்கிறது. உலகக் கோப்பையில் நான்காவது இடம் பிடித்த அந்த அணி, யூரோ2020 தொடரில் இரண்டாம் இடம் என பெரிய தொடர்களில் சிறப்பாக செயல்பட்டிருக்கிறது அந்த அணி. ஆனால், கோப்பைகள் வெல்லவேண்டும் என்ற அந்த அணியின் எதிர்பார்ப்பை இன்னும் சவுத்கேட்டால் பூர்த்தி செய்ய முடியவில்லை. டிஃபன்ஸிவ் கேமில் அதிக கவனம் செலுத்தும் அவரது அணுகுமுறை உலகக் கோப்பை போன்ற நாக் அவுட் தொடர்களுக்கு மிகவும் பொறுத்தமாக இருக்கும். ஒரு வகையில் அதுதான் இந்த முன்னேற்றங்களுக்கும் காரணமாக இருக்கிறது. சமீபத்தில் நடந்து முடிந்த பெண்கள் யூரோ தொடரில் நெதர்லாந்து பயிற்சியாளர் செரீனா வெகமன் தலைமையில் இங்கிலாந்து அணி சாம்பியன் பட்டம் வென்றது. ஒரு வெளிநாட்டு பயிற்சியாளரின் கீழ் அவர்கள் கோப்பை வென்றிருப்பது சவுத்கேட் மீது அதிக நெருக்கடியை ஏற்படுத்தும்.
பலம்:
மிகவும் தரமான அணி. ஹேரி கேன், ரஹீம் ஸ்டெர்லிங், ஜான் ஸ்டோன்ஸ், ஜோர்டான் ஹெண்டர்சன், லூக் ஷா என பல உலகக் கோப்பைகளில் விளையாடிய அனுபவ வீரர்கள் இருக்கிறார்கள். அதுமட்டுமல்லாமல் ஃபில் ஃபோடன், ஜூட் பெல்லிங்ஹம், மேசன் மவுன்ட் என துடிப்பான இளம் வீரர்கள் நிறைந்திருக்கிறார்கள். அதனால் அனுபவம், வேகம், திறமை என அனைத்தும் சரியான கலவையில் கலந்த அணியாக இருக்கிறது இங்கிலாந்து.
பலவீனம்:
பென் சில்வெல் உள்பட பல முன்னணி வீரர்கள் காயம் காரணமாக உலகக் கோப்பையில் விளையாடாதது அந்த அணிக்குப் பெரிய இழப்பு. அவர்கள் இருந்திருந்தால் நிச்சயம் அணிக்கு இன்னும் உதவிகரமாக இருந்திருக்கும். தகுதிச் சுற்று போட்டிகளில் சிறப்பாக விளையாடியிருந்தாலும், சமீபத்திய ஃபார்ம் கவலை அளிப்பதாக இருக்கிறது. அந்த அணி கடைசியாக விளையாடிய 6 போட்டிகளில் ஒன்றில் கூட வெற்றி பெறவில்லை. சவுத்கேட்டும் தன்னுடைய அணுகுமுறையை அடிக்கடி மாற்றுகிறார். 2 மிட்ஃபீல்டர்களோடு ஆடும்போது, நடுகளத்தில் வாய்ப்புகள் அதிகமாக உருவாவதில்லை. அதுமட்டுமல்லாமல் அந்த அணியின் முக்கிய டிஃபண்டர்களான ஹேரி மகுயர், ஜான் ஸ்டோன்ஸ் ஆகியோர் உலகக் கோப்பைக்கு முன் தொடர்ச்சியாக போட்டிகளில் ஆடவில்லை. அனைத்துக்கும் மேலாக கோல்களுக்கு இன்னமும் ஹேரி கேனையே அந்த அணி அதிகம் நம்பவேண்டியதாக இருக்கிறது. ஆனால், அவருமே கூட பெரிய நாக் அவுட் போட்டிகளில் கோலடிக்கத் தவறியிருக்கிறார்!
நம்பிக்கை:
ஹேரி கேன்! கால்பந்து உலகில் தற்போதைக்கு இருக்கும் மிகச் சிறந்த ஃபார்வேர்டுகளில் ஒருவர். கடந்த உலகக் கோப்பையில் 6 கோல்கள் அடித்து கோல்டன் பூட் விருதும் வென்றார். கோல் அடிப்பதோடு மட்டுமல்லாமல், கோல் வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுப்பதிலும் வல்லவர். பல போட்டிகளில் தனி ஆளாக தன் அணியைத் தூக்கிச் சுமந்திருக்கிறார். இந்த உலகக் கோப்பையிலும் நிச்சயம் கோல்டன் பூட் விருதுக்கான ரேஸில் இருப்பார்.
வாய்ப்பு:
தங்கள் குரூப்பை இங்கிலாந்து அணி நிச்சயம் வெல்லவேண்டும். இரான், வேல்ஸ், அமெரிக்கா போன்ற அணிகள் சவால் கொடுத்தாலும், இந்தப் போட்டிகளில் இங்கிலாந்து வெற்றி பெறவேண்டும். ஆனால், நாக் அவுட் போட்டிகள் கடந்த உலகக் கோப்பையை போல் அந்த அணிக்கு எளிதாக அமையப் போவதில்லை. ரவுண்ட் ஆஃப் 16 சுற்றில் நெதர்லாந்து, காலிறுதியில் அர்ஜென்டினா ஆகிய அணிகளை இங்கிலாந்து சந்திக்க நேரிடலாம். சமீபத்திய ஃபார்ம், அணியின் காயங்கள் போன்றவற்றையெல்லாம் வைத்துப் பார்த்தால், இங்கிலாந்து அணி காலிறுதி வரை செல்லலாம். அதற்கு மேல் முன்னேறும் ஒவ்வொரு படியுமே போனஸ் தான்!
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
https://ift.tt/QGniVL9ஈ சாலா கம் நமதே என்று ராயல் சேலஞ்சர்ஸ் ரசிகர்கள் புலம்பவதுபோல் ஒவ்வொரு முறையும் 'It's coming home' என்று புலம்பிக் கொண்டே இருக்கிறார்கள். ஆனால், அதுவும் வருவதாகத் தெரியவில்லை. இம்முறையாவது தங்கள் அணி கோப்பையை வெல்லும் என்று நம்பிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களின் நம்பிக்கை பலிக்குமா! இந்தத் தொடரில் அந்த அணிக்கு இருக்கும் வாய்ப்புகள், பலம், பலவீனம் என்ன? அந்த அணியின் நம்பிக்கை யார்? விரிவாக பார்க்கலாம்.

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்