கத்தார் உலகக் கோப்பை கால்பந்து தொடரில் இன்று நான்கு போட்டிகள் நடைபெற உள்ளன.
கண்கவர் கத்தார் உலகக் கோப்பை கால்பந்து திருவிழாவில் இன்று நடைபெற உள்ள நான்கு போட்டிகளும் ரசிகர்களின் கண்களுக்கு விருந்தளிக்கக் காத்திருக்கின்றன. இன்று மதியம் 3.30 மணிக்கு துவங்கும் முதல் போட்டியில் டி பிரிவில் இடம்பெற்றுள்ள துனிசியா அணி ஆஸ்திரேலியா அணியை எதிர் கொள்கிறது.
மாலை 6.30 மணிக்கு துவங்கும் இரண்டாவது போட்டியில் சி பிரிவில் இடம்பெற்றுள்ள போலந்து - சவுதி அரேபியா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதில், பலம்வாய்ந்த அர்ஜென்டினா அணியை வெற்றிகொண்ட சவுதி அரேபியா அணி இந்த போட்டியில் வெற்றிபெற வேண்டும் என்ற முனைப்புடன் களம் காணும். அதேபோல் மெக்சிகோ அணியுடன் டிரா செய்த போலந்து அணியும் வெற்றிபெற வேண்டும் என களம் காணும். எனவே இந்த போட்டியில் விறு விறுப்புக்கு பஞ்சம் இருக்காது என நம்பலாம்.
இதையடுத்து இரவு 9.30 மணிக்கு துவங்கும் மற்றொரு போட்டியில் டி பிரிவில் இடம்பெற்றுள்ள பிரான்ஸ் அணி டென்மார்க் அணியுடன் மோத உள்ளது. முன்னதாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் பிரான்ஸ் அணி 4-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. அதேபோல் டென்மார்க் அணி துனிசியா அணியுடன் டிரா செய்துள்ள நிலையில், இந்த போட்டி மிகவும் கடுமையானதாக இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
நள்ளிரவு 12.30 மணிக்கு நடைபெறும் போட்டியில் சி பிரிவில் இடம்பெற்றுள்ள அர்ஜென்டினா மெக்சிகோ அணியுடன் விளையாட உள்ளது. சவுதி அரேபியாவிடம் தோல்வியுற்ற அர்ஜென்டினா அணியும். போலந்து அணியுடன் டிரா செய்த மெக்சிகோ அணியும் விளையாடும் இந்த போட்டியில், இரு அணிகளும் தங்களது பலத்தை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளன.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்