ஆப்கானிஸ்தானில் பெண்கள் பூங்காக்கள் மற்றும் கேளிக்கை நிகழ்ச்சிகளுக்குள் செல்ல தாலிபான்கள் தடைசெய்துள்ளனர்.
இந்த வாரம் தாலிபான்களால் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த புதிய விதி, ஆப்கானிய பெண்களை மேலும் மன அழுத்ததிற்கு ஆளாக்கி உள்ளதாக கூறப்படுகிறது. காரணம் ஏற்கனவே ஆண் துணையின்றி பொது இடங்களில் பயணம் செய்ய தடை விதிக்கப்பட்டிருந்தது. மேலும், வீட்டை விட்டு சின்ன வேலைகளுக்காக வெளியே வரும்போதெல்லாம் ஹிஜாப் அல்லது பர்தா அணிய வேண்டிய உத்தரவை தாலிபான்கள் பிறப்பித்துயிருந்தனர்.
பொது இடங்கள் பெண்களுக்கு மறுத்துவரும் சூழலில் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் டீன் ஏஜ் பெண்களுக்கான பள்ளிகளும் ஒரு வருடத்திற்கும் மேலாக மூடப்பட்டுள்ளன. காரணம், சமீபத்தில் 6-ம் வகுப்புக்கு மேல் பெண்கள் பள்ளிகளுக்கு செல்ல தாலிபான் அரசு தடை விதித்தது. தற்போது பெண்கள் மீதான கட்டுப்பாடுகளை தலிபான்கள் தீவிரமாக்கி வருகின்றனர்.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் முதல் ஆப்கானில் அமெரிக்கா ராணுவம் பின்வாங்கியதை தொடந்து தாலிபான்கள் ஆட்சி ஆப்கானிஸ்தானில் நடைபெற்று வருகிறது. ஆட்சிபொறுப்பு ஏற்றுது முதல் ஆப்கானிஸ்தானில் அறநெறி அமைச்சம் பெண்களுக்கு ஏகப்பட்ட புதிய விதிகளை உத்தரவிட்டு வருவதால் தொடந்து சர்ச்சை எழுந்து வருகிறது.
இதுகுறித்து இஸ்லாமிய சட்டம் படிக்கும் 21 வயதான ரைஹானா என்ற பெண், 21, தனது சகோதரிகளுடன் பொழுதினை கழிக்க பூங்காவிற்கு வந்த பிறகு , அங்கு அனுமதி மறுக்கபட்டத்தை தொடர்ந்து தனது ஏமாற்றத்தை பகிர்ந்து கொண்டார்.
"நாங்கள் மகிழ்ச்சியாக இருந்தோம்.. இப்போ நாங்கள் வீட்டில் தங்குவதற்கு சோர்வாக இருக்கிறோம். இஸ்லாத்தில், வெளியே செல்லவும் பூங்காக்களைப் பார்வையிடவும் அனுமதிக்கப்படுகிறது.
உங்கள் சொந்த நாட்டில் உங்களுக்கு சுதந்திரம் இல்லாதபோது, வாழ்வதன் அர்த்தம் என்ன? எங்களுக்கு பள்ளிகளும், வேலைகளுக்கு செல்லவும் அனுமதி இல்லை. இப்போது பூங்காவிற்கு செல்ல கூட அனுமதி இல்லை என்றால் என்ன சொல்வது? நாங்கள் நாள் முழுவதும் வீட்டில் இருப்பது சலிப்பாகவும் மனம் சோர்வாகவும் இருக்கிறது” என ரைஹானா தனது வேதனை பகிர்ந்துள்ளார்.
இதையும் படியுங்கள் - 40 வயதை கடந்த பெண்களே!.. இந்த உணவுமுறைகள் உங்களுக்குத்தான்!
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்