டி20 உலகக்கோப்பை தொடரில் சூப்பர் 12 சுற்றுக்கு கூட தகுதி பெறாமல் வெளியேறியது வெஸ்ட் இண்டீஸ் அணி.
ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில், இரண்டு முறை சாம்பியனான வெஸ்ட் இண்டீஸ் அணி ஸ்காட்லாந்து, அயர்லாந்து ஆகிய சிறிய அணிகளிடம் தோற்று முதல் சுற்றுடன் வெளியேறியது. இந்த மோசமான தோல்வி எதிரொலியாக வெஸ்ட் இண்டீஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் பில் சிமோன்ஸ் அந்த பதவியில் இருந்து விலக முடிவு செய்துள்ளார். வெஸ்ட்இண்டீஸ் அணி நவம்பர்-டிசம்பரில் ஆஸ்திரேலியாவில் 2 டெஸ்டில் விளையாடுகிறது. இந்த தொடருடன் அவர் விடைபெற இருப்பதாக வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் நிக்கோலஸ் பூரன் தன்னுடைய நிலைப்பாடு குறித்து விளக்கம் அளித்துள்ளார். அதில் அவர், ''அணியின் எதிர்காலம் எப்படி இருக்கும் என்பது எங்களுக்கு தெரியவில்லை. அனைவருக்கும் இது நல்ல பாடமாக இருந்தது. அடுத்து என்ன நடக்கும் என்பதைக் காலம் தான் சொல்லவேண்டும். இப்போது அவரவர் திறமையில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். காயத்தைக் குணமாக்கும் ஓர் மருந்து ஓய்வு. மனத்துக்குள் மிகுந்த வேதனையுடன் உள்ளோம். இந்த வேதனையை ஊக்கமாக்கிக்கொள்ள வேண்டும். வலுவான அணியாக மீண்டு வர வேண்டும்.
கேப்டன் பதவி குறித்து கடந்த சில மாதங்களாக யோசனை செய்து வருகிறேன். கிரிக்கெட் விளையாடுவது என் கனவு. இதற்கு முன்பு மிகப்பெரிய சரிவைச் சந்தித்துள்ளேன். இப்போது இன்னொரு சோதனை. நான் சவால்களை எதிர்கொள்வதில் ஆர்வம் உள்ளவன். இது இன்னொரு சவால். இந்தத் தோல்வி என்னைத் தடுத்து நிறுத்தாது. இந்த அனுபவங்களில் இருந்து பாடங்கள் கற்றுக் கொள்வேன்'' என்றார்.
இதையும் படிக்கலாமே: மைதானத்திலேயே கதறி அழுத ஷதாப் கான்.. விமர்சனங்களால் துளைக்கப்படும் பாக். அணி!
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
https://ift.tt/fqDxYAuடி20 உலகக்கோப்பை தொடரில் சூப்பர் 12 சுற்றுக்கு கூட தகுதி பெறாமல் வெளியேறியது வெஸ்ட் இண்டீஸ் அணி.

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்