வேலூர் மாவட்டம் காட்பாடி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் அதிகாலையில் பெய்த கன மழையால் மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் மின்தடை ஏற்பட்டது.
மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பகலில் வெயில் வாட்டிவந்த நிலையில், இன்று அதிகாலை வேலூர், காட்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை பெய்தது.
சுமார் 1 மணி நேரம் வரை நீடித்த கனமழை காரணமாக காட்பாடியில் சில இடங்களில் மின்தடை ஏற்பட்டது. இதனால் மக்கள் சிரமத்திற்கு ஆளாகினர்.
தேனி:
தேனி மாவட்டம் பெரியகுளம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக இடி மின்னலுடன் கனமழை வெளுத்து வாங்கியது. 4வது நாளாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரியில் கடந்த சில தினங்களாக கடும் வெயில் சுட்டெரித்து வந்த நிலையில் மாலையில் கனமழை கொட்டியது. மாலை நான்கு மணிக்கு துவங்கிய மழையானது சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக வெளுத்து வாங்கியது. இதன் காரணமாக சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியதால் பொதுமக்கள் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளானார்கள். குறிப்பாக பணிக்கு சென்று விட்டு திரும்பிய ஊழியர்கள் மற்றும் பள்ளிக்கு சென்று விட்டு திரும்பிய மாணவ மாணவிகள் வீடு திரும்ப முடியாமல் சிரமம் அடைந்தனர்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டத்தில் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பில் இருந்தே மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பரவலாக பலத்த மழை பெய்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சியோடு வேளாண் பணிகளை தொடங்கியுள்ளனர். நேற்று முன் தினம் மழை சற்று ஓய்ந்திருந்த நிலையில் நேற்று மாலை வேளையில் கரம்பக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அரை மணி நேரத்திற்கும் மேலாக கனமழை வெளுத்து வாங்கியது. இந்த மழையால் கறம்பக்குடி பேருந்து நிலையம் உள்ளிட்ட பிரதான சாலைகளில் மழைநீர் வெல்லும் போல் பெருக்கெடுத்து ஓடியது. பருவ மழைக்கு முன்பாகவே கறம்பக்குடி பகுதியில் இன்று நல்ல மழை பெய்தது அப்பகுதி விவசாயிகளுக்கு பொதுமக்களுக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
மயிலாடுதுறை:
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் காலை முதல் வெய்யில் வாட்டி வந்த நிலையில் திடீரென நேற்று கன மழை பெய்தது. சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக இடியுடன் கூடிய கன மழை பெய்ததால் நகரின் பிரதான சாலைகளில் மழைநீர் குளம் போல் தேங்கியது. நகரில் பல சாலைகளில் மழை நீருடன், கழிவுநீரும் கலந்து தேங்கி நிற்பதால் பொதுமக்கள், வாகன ஒட்டிகள் சிரமத்துடன் சாலையை கடந்து சென்றனர். திடீர் கன மழையால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. ஒரு மணி நேர மழைக்கே இந்த நிலை என்றால் தொடர் மழையின் போது சாலைகள் பெரிதும் பாதிக்கும் நிலை ஏற்படும். எனவே மழைக்காலம் தொடங்கிய நிலையில் நகர் பகுதி மழை நீர் வடிகால்களை விரைந்து சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விருதுநகர்:
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் வெயில் வாட்டிக் கொண்டிருந்த நிலையில், சேத்தூரில் மட்டும் காலநிலை தலைகீழாக மாறி நேற்று மதியம் அரை மணி நேரம் வரை கனமழை பெய்தது. மழை விட்ட சில நிமிடங்களில் மீண்டும் காலநிலை தலைகீழாக மாறி வெயில் சுட்டெரித்தது.
சென்னை புறநகர் பகுதி:
சென்னை மற்றும் சென்னை புறநகர் பகுதிகளில் சுமார் அரை மணிநேரத்திற்கு மேல் கன மழை வெளுத்து வாங்கியது. இதன் காரனமாக.
பூந்தமல்லி நீதிமன்ற வாசலில் வெள்ள நீர் தேங்கி இருப்பதால் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் கடும் அவதி அடைந்தனர். சாலையில் முழங்கால் அளவு வெள்ள நீர் தேங்கியிருப்பதால் வாகனங்கள் மிதந்து செல்லும் அவல நிலை ஏற்பட்டது. ஒவ்வொரு மழைக்கும் மேற்கொண்ட சாலையில் இதே போல் தான் காட்சியளிப்பதாகவும்,பூவிருந்தவல்லி நகராட்சி ,நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் கண்டுக்கொள்வதில்லை என புகார் தெரிவித்தனர். தேங்கி இருக்கும் மழை நீரை உடனடியாக அகற்ற வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்தனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
https://ift.tt/YtFRdq1வேலூர் மாவட்டம் காட்பாடி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் அதிகாலையில் பெய்த கன மழையால் மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் மின்தடை ஏற்பட்டது.

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்