Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

மத்திய அரசின் திட்டங்களை பெயர் மாற்றி தமிழக அரசு பயன்படுத்துகிறது- மத்திய அமைச்சர்

https://ift.tt/3N5gDSk

மத்திய அரசின் திட்டங்களை தமிழகத்தில் ஆளும் திமுக அரசின் திட்டங்களாக காட்டிக் கொள்வதாக மத்திய நீர் வளம் மற்றும் பழங்குடியினர் நலத்துறை இணை அமைச்சர் பிஸ்வேஸ்வர் டுடு குற்றம் சாட்டியுள்ளார்.

சேலம் மாவட்டத்தில் மத்திய அரசின் திட்டங்கள் குறித்து மத்திய நீர் வளம் மற்றும் பழங்குடியினர் நலத்துறை இணை அமைச்சர் பிஸ்வேஸ்வர் டுடு நேற்று அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை அஸ்தம்பட்டியில் உள்ள ஆய்வுமாளிகையில் மத்திய இணை அமைச்சர் பிஸ்வேஸ்வர் டுடு சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், மத்திய அரசு தமிழகத்திற்கு பல்வேறு திட்டங்களை வழங்கி அதற்கான நிதியும் ஒதுக்கீடு செய்து வருகிறது. ஆனால் அந்த திட்டங்களையும் நிதியையும் தமிழக அரசு முறையாக பயன்படுத்தவில்லை என்றும் மக்கள் நலனுக்காக மத்திய அரசு திட்டங்களை வகுத்தாலும் அதை தமிழக அரசு மக்களுக்கு முழுமையாக கொண்டு சேர்க்கவில்லை எனவும் குற்றம் சாட்டினார்.

image

அதே போல மத்திய அரசின் திட்டங்களை பெயர் மாற்றி தங்கள் அரசு செய்து கொண்டது போல மத்திய அரசு நிதியை மற்ற பணிகளுக்கு செலவிடுகின்றனர்.

தமிழகம் முழுவதும் 53 சதவீதம் மட்டுமே வீடுகளுக்கு இலவச குடிநீர் வழங்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்தி உள்ளது. 2022க்குள் முடிக்கப்பட வேண்டும் என இலக்கு நிர்ணயித்தும் அந்த இலக்கு முடிக்கப்படாததால் அந்த திட்டம் 2024 ஆம் ஆண்டு வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மலைவாழ் மக்களின் கல்வி மேம்பாட்டுக்காக இந்தியா முழுவதும் 700 சிறப்பு பள்ளிகள் துவக்கப்பட உள்ளதாகவும், இதில் எட்டு பள்ளிகள் தமிழகத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு, இரண்டு பள்ளிகள் பணிகள் நிறைவு பெற்று செயல்பட தொடங்கியது.

ஆனால் இரண்டு பள்ளிகளில் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், மீதம் உள்ள நான்கு பணிகளுக்கு வேலை இன்னும் துவக்கப்படவில்லை. இந்த பள்ளிகளில் சர்வதேச தரத்திற்கு ஏற்ற வகையில் ஆங்கில வழிக் கல்வி கற்பிக்கவும், ஆண்கள் மற்றும் பெண்கள் என இருபாலரும் சமமாக பயிலும் வகையிலும், அனைவருக்கும் இலவச கல்வி அளிப்பதே இந்த திட்டத்தின் நோக்கம் என்றும் தெரிவித்தார்.

image

தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்தவர், மத்திய அரசின் பெரும்பாலான திட்டத்திற்கு மாநில அரசு பங்களிப்பு இல்லாததால் மத்திய அரசின் சார்பில் ஒதுக்கப்பட்ட நிதி திரும்ப பெற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்த விஷயத்தில் மாநில அரசுகள் கவனத்தில் கொண்டு, மத்திய அரசு நிதியை பெற்று தங்கள் பங்களிப்போடு திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த வேண்டும். ஜல்சக்தி திட்டத்தின் கீழ் இலவச குடிநீர் வழங்குவதற்காக பல்வேறு ஆவணங்கள் கேட்பதாக புகார் எழுந்தது. ஆனால் மின்சார இணைப்புக்கான ஆவணங்கள் இருந்தாலும் கூட அவர்களுக்கு குடிநீர் இணைப்பு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. மற்ற ஆவணங்களை கேட்டு தொந்தரவு செய்யக்கூடாது என அறிவுறுத்தலும் வழங்கப்பட்டுள்ளது.

image

மேலும் அரசு அலுவலகங்களில் தமிழக முதலமைச்சர் மற்றும் பாரத பிரதமர் படம் இருக்க வேண்டும். ஆனால் தமிழகத்தை பொறுத்த மட்டில் கலைஞர் கருணாநிதி படமும், தமிழக முதலமைச்சர் படம் மட்டுமே உள்ளது பாரத பிரதமர் படம் வைக்காதது துரதிஷ்டவசமானது என்றும், பொதுவாக மத்திய அரசு திட்டங்களை செயல்படுத்துவதில் தமிழக அரசு செயல்பாடு திருப்திகரமாக இல்லை என்றும் அவர் குற்றம் சாட்டினார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

கருத்துரையிடுக

0 கருத்துகள்