Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

இந்தியாவில் ஒரு ஆண்டில் மட்டும் இத்தனை ஆயிரம் காதல் கொலைகளா? அதிர வைக்கும் புள்ளிவிவரம்!

தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் தரவுகளின் படி, காதல் பிரச்னையில் மட்டும் 2020-ம் ஆண்டில் சுமார் 3 ஆயிரத்திற்கும் அதிக கொலைகள் நடந்துள்ளன.

காலங்கள் கடந்தாலும், இப்போலாம் தலைமுறை மாறிவிட்டன என்று கூறிக்கொண்டாலும் இன்றைய கால சூழ்நிலையிலும் பெண்களின் மீது தொடுக்கப்படும் அடக்குமுறையானது குறைந்த பாடில்லை. அதில் முதலிடத்தில் இருப்பது காதலை ஏற்க மறுத்தால் ஆசிட் அடிப்பதும், பலவாறு கொலை செய்வதுமான காதலின் பெயரால் நடக்கும் கொலைகள் தான். காதலை ஏற்பதும், ஏற்க மறுப்பதும் தனிப்பட்ட உரிமை என்பது இன்னும் அடிப்படை மனிதர்களுக்கு புரியாமலே இருப்பது இந்த காலத்திலும் வினோதமானதாகவே இருக்கிறது. தோல்வியை ஏற்கும் பக்குவம் இல்லாமையே இந்த தலைமுறைகளிலும் இன்னும் இந்த கொடுமைகள் அரங்கேற காரணமாக உள்ளன.

image

தமிழகத்தில் மட்டுமல்ல இந்தியா முழுவதுமே, காதலின் பெயரால் கடந்த 2 வருடத்தில் நடந்த கொலைகள் மட்டுமே சுமார் 3,000 என்று ஒரு புள்ளி விவரம் சொல்கிறது. காலங்கள் கடந்து பல்வேறு மாற்றங்களும், வாழ்வியல் முறைகளும் வந்துவிட்டாலுமே இன்னும் பெண்களின் மேல் மேற்கொள்ளப்படும் அடக்குமுறைகளானதும், அதன்பேரால் நடக்கும் கொடுமைகளானதும் நீண்டு கொண்டே தான் போகின்றன.

image

புள்ளி விவரங்களின் படி, காதலால் நடந்த கொலைகள் 2020ஆம் ஆண்டிலிருந்து நாடு முழுவதும் 3031 ஆக இருக்கிறது. மாநிலங்களின் படி எடுத்துகொண்டால், கொலைகளின் எண்ணிக்கை உத்தரப்பிரதேசம் 462, மகாராஷ்டிரா 299, மத்தியப்பிரதேசம் 298, பீகார் 285, தமிழ்நாடு 249, குஜராத் 231 என்று பட்டியல் நீள்கிறது.

image

இந்த புள்ளிவிவரங்கள் அதிர்ச்சியை மட்டுமே நமக்கு தருகின்றது. வாழ்க்கையில் காதலை பொறுத்தவரை தோல்விகளை சந்திக்கும் பக்குவமும், அதிலிருந்து கடந்து வரும் நிதானமும் இன்றைய தலைமுறைக்கு உளவியல் ரீதியாக கொண்டுசெல்ல வேண்டிய கடமை எல்லோருக்கும் இருக்கிறது. அதுவே குற்றங்களை குறைக்கும் வழியை ஏற்படுத்திச் செல்லும்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

https://ift.tt/ASn1fiy

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

கருத்துரையிடுக

0 கருத்துகள்