இந்தியா நீங்கலாக உலகின் அனைத்து நாடுகளிலும் வெஸ்டர்ன் டாய்லெட் முறையே பின்பற்று வருகிறது. ஆனால் தற்போது இந்தியாவிலும் அந்த வெஸ்டர்ன் டாய்லெட் குடிக்கொண்டுவிட்டது. இருப்பினும் இந்த மேற்கத்திய கழிவறையை பயன்படுத்தும் பலருக்கும் இருக்கும் ஒருமித்த சந்தேகம் என்வென்றால் எதற்காக ஃப்ளஷ் செய்ய இரண்டு பட்டன்கள் கொடுக்கப்பட்டிருக்கிறது என்பதுதான்.
அந்த இரண்டு பட்டனில் ஒன்று சிறியதாகவும் மற்றொன்று பெரியதாகவுமே இருக்கும். இந்த இரண்டு பட்டன்களுக்கும் உள்ள வித்தியாசம் என்ன அல்லது ஏன் அவை முதலில் இரண்டாக நிறுவப்பட்டது என்பதை அறியாமலேயே பல தசாப்தசங்களாக வெஸ்டர்ன் டாய்லெட்டை மக்கள் பயன்படுத்தி வந்திருக்கிறார்கள்.
இந்த ஃப்ளஷ் பட்டனின் சிறியதை அழுத்தினால் குறைந்தளவு தண்ணீர் வரும் என்றும், பெரியதை அழுத்தினால் அதிகளவு தண்ணீரை வெளியேற்றும் என்றுதான் பல காலமாக நினைத்திருப்பீர்கள். ஆனால் எது உண்மையான காரணம் என்ன தெரியுமா? இந்த பழமையான கேள்விக்கு இங்கிலாந்தின் மிகப்பெரிய பொது நீர் விநியோக நிறுவனம் பதிலை கொண்டு வந்திருக்கிறது.
தேம்ஸ் வாட்டரின் கருத்துக்கணிப்பின்படி, 50% பங்கேற்பாளர்கள் சிறிய பொத்தான் ஒரு குறுகிய ஃப்ளஷுக்கானது என்று நினைக்கவில்லை. இரண்டு பொத்தான்களுக்கு இடையேயான உண்மையான வித்தியாசம் என்ன என்பதும் பெரும்பாலானவர்களுக்கு உண்மையில் தெரியாது என்று தெரிய வந்திருக்கிறது.
தேம்ஸ் வாட்டரின் நீர் திறன் மேலாளர் ஆண்ட்ரூ டக்கர் இது தொடர்பாக கூறுகையில், பல வகையான கழிப்பறைகள் இருப்பதால் மக்கள் பெரும்பாலும் இரண்டு ஃப்ளஷ் பொத்தான்களைப் பற்றி குழப்பமடைகிறார்கள்.
பெரும்பாலும் சிறிய ஃப்ளஷ் பட்டன் விருப்பமான தேர்வாக இருப்பது அது உண்மையில் அதிக தண்ணீரை பயன்படுத்துவதாக தோன்ற வைக்கிறது. ஆனால் பெரிய ஃப்ளஷ் “பொதுவாக ஆறு லிட்டர் தண்ணீரைப் பயன்படுத்துகிறது, அதே சமயத்தில் சிறிய ஃப்ளஷ் பாதி மட்டுமே வெளியிடுகிறது” என்று ஆண்ட்ரூ டக்கர் தெளிவுபடுத்தியுள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், பெரும்பாலான நவீன கழிப்பறைகள் மிக எளிதாக கசிந்து விடுவதால், தண்ணீர் வீணாகிறது என்று கூறியுள்ளார். மேலும் "வெஸ்டர்ன் டாய்லெட்டின் கழிவறையில் கசிவு இருக்கும் போது, தண்ணீர் வீணாக கீழே வடிகிறது. அதனால் அடிக்கடி கவனிக்கப்படாமல் போகும். டாய்லெட் சீட்டின் அடிப்பகுதியில் ஒரு சிறிய சிற்றலை இருக்கலாம். ஆனால் அவை பெரிய அளவிலான தண்ணீரை வீணடிக்கலாம்," என்றும் அவர் கூறினார்.
இதுபோக, “வாடிக்கையாளரின் வீட்டுக்கே சென்று பார்த்த போது அவர்களிடம் தண்ணீரை குறைந்தளவு பயன்படுத்தும்படியும் அறிவுறுத்தியிருந்தோம். இருப்பினும், நவீன கழிப்பறை புஷ் பட்டன்கள்தான் தண்ணீர் கசிவதற்கு காரணமாக இருக்கிறது. ஆகையால் நீர் கசிவு ஏற்படாத வகையில் ஃப்ளஷ் பட்டன் உள்ளிட்டவற்றை தயாரிக்கும் படி உற்பத்தியாளர்களிடம் பேசியிருக்கிறோம்” என ஆண்ட்ரூ தெரிவித்துள்ளார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்