Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

ஆதார் அட்டையில் உங்கள் புகைப்படத்தை நீங்களே மாற்றம் செய்யலாம் - Step-by-step வழிமுறைகள்

இந்திய குடிமக்களுக்கு ஆதார் அட்டை ஒரு முக்கியமான அடையாள ஆவணங்களில் ஒன்றாகியுள்ளது. 12 இலக்க தனிப்பட்ட அடையாள எண்களுடன், பயோமெட்ரிக் தரவுகளைச் சேர்த்து  இந்திய அரசால் வழங்கப்படுகிறது. அரசாங்க சலுகைகளைப் பெறுவதற்கும், பள்ளி மற்றும் கல்லூரிகள் மற்றும் பிற அதிகாரப்பூர்வ வேலைகளுக்கும் இந்த அடையாள அட்டை அவசியமாகிறது.

இத்தனை அவசியமான அடையாள அட்டையில் இருக்கும் 12 இலக்க எண்கள், வாழ்நாள் முழுவதுக்கும் ஒவ்வொரு தனிநபருக்கும் அதே எண்கள் தான் தொடரும். ஆதார் அட்டையில் என்னென்ன மாற்றங்கள் செய்தாலும் கூட அதிலிருக்கும் எண் மாறாது.

வீட்டு முகவரி, செல்போன் எண் மாறும் போது நிச்சயம் அவற்றைப் புதுப்பிக்க வேண்டும். அதே போல் புகைப்படத்தை புதுப்பிக்கலாம்.

image

எனவே ஆதார் அட்டையில் ஏதேனும் ஒரு தகவலை மாற்ற விரும்புபவர்கள், , விடை- இன் அதிகாரப்பூர்வ தளத்தில் நீங்களாகவே திருத்தம் செய்யலாம் அல்லது அருகிலிருக்கும் ஆதார் பதிவு மையம்/ஆதார் சேவா கேந்திராவிற்குச் சென்று மாற்றம் செய்யலாம்.

உங்கள் ஆதார் அட்டையில் உங்கள் புகைப்படத்தை எவ்வாறு நீங்களே மாற்றலாம் என்பதற்கான படிப்படியான வழிகாட்டி இங்கே உள்ளது.

Step 1: UIDAI-ன் அதிகாரப்பூர்வ தளத்துக்கு uidai.gov.in. சென்று இணையதளத்திலிருந்து ஆதார் பதிவு படிவத்தை டவுன்லோட் செய்யவும்.

Step 2: அந்த படிவத்தில் உள்ள அனைத்து விவரங்களையும் பூர்த்தி செய்து, அருகில் உள்ள ஆதார் பதிவு மையம் அல்லது ஆதார் சேவா கேந்திராவிடம் சமர்ப்பிக்கவும்.

Step 3: அங்கிருக்கும் நிர்வாகி அனைத்து விவரங்களையும் பயோமெட்ரிக் சரிபார்ப்பு மூலம் உறுதி செய்வார்.

Step 4: இதன் பின்பு, ஆதார் அட்டையில் புதுப்பிக்கப்படும் புதிய படத்தைக் கிளிக் செய்து, அப்டேட் செய்வார்.

Step 5: ஆதார் நிர்வாகி உங்களுக்கு ஒப்புகை சீட்டு மற்றும் புதுப்பிப்பு கோரிக்கை எண்ணை (URN) வழங்குவார். சேவைக்கு ஜிஎஸ்டியுடன் ரூ.100 கட்டணம் வசூலிக்கப்படும்.

Step 6: இதன் பின்பு, ஆதார் புகைப்பட புதுப்பிப்பு செயல்முறைக்கு 90 நாட்கள் வரை ஆகலாம். இந்த செயல்முறை செயல்முறை முடிந்ததும், ஆதார் பதிவு மையத்திற்குச் சென்று அல்லது UIDAI-ன் அதிகாரப்பூர்வ இணையதளத்திலிருந்து மின்-ஆதாரின் நகலைப் பதிவிறக்குவதன் மூலம் உங்கள் புதுப்பிக்கப்பட்ட ஆதார் அட்டையை அச்சிடலாம்.

( இந்த 90 நாட்களில், உங்களது புகைப்படம் மாற்றம் எந்த நிலையில் உள்ளது என்பதைத் தெரிந்துகொள்ள UIDAI-ன்அதிகாரப்பூர்வ இணையதளத்தில் URN எண்ணைப் பயன்படுத்தி உங்களின் சமீபத்திய ஆதார் அட்டையின் நிலையைக் கண்காணிக்கலாம் )

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

https://ift.tt/L6HtjT0

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

கருத்துரையிடுக

0 கருத்துகள்