இங்கிலாந்து நாட்டை கிட்டத்தட்ட எழுபது ஆண்டுகளாக ஆட்சி செய்து வந்த ராணி இரண்டாம் எலிசபெத் கடந்த செப்டம்பர் 8ம் தேதி தன்னுடைய 96வது வயதில் காலமானார். அவரது மறைவுக்கு உலகத் தலைவர்கள் முதல் சாமானிய மக்கள் வரை தங்களது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.
ராணி இரண்டாம் எலிசபெத்திற்கு பிறகு பிரிட்டனின் மாட்சிமை பொருந்திய மன்னராக எலிசபெத்தின் மகனும் இளவரசருமான மூன்றாம் சார்லஸ் இன்று பிரகடனப்படுத்தப்பட்டிருக்கிறார். இதனையடுத்து மறைந்த ராணி எலிசபெத்தின் சொத்துகளும், ராணிக்கான சிறப்பு சலுகைகள் அனைத்தும் இனி மன்னர் சார்லஸுக்கு கிட்டும் என்பது மரபு.
ALSO READ:
குயின் எலிசபெத்தின் மறைவுக்கு பிறகு பிரிட்டன் அரசில் வரப்போகும் மாற்றங்கள் என்ன தெரியுமா?
இந்நிலையில் உலக பிரபலங்கள் பயன்படுத்திய பொருட்கள் பெரும்பாலும் பொதுவெளியில் அறிமுகப்படுத்தப்பட்டு அது ஏலத்தில் விடுவதோ, மியூசியத்தில் வைக்கப்படுவதோ அல்லது விற்கப்படுவது வழக்கமாக இருக்கும்.
அந்த வகையில் மறைந்த குயின் இரண்டாம் எலிசபெத் அலெக்ஸாண்ட்ரா மேரி பயன்படுத்திய பொருள் ஒன்று பிரபல இ-காமர்ஸ் தளத்தில் 12,000 டாலருக்கு அதாவது இந்திய மதிப்பில் ஒன்பதரை லட்சம் ரூபாய்க்கு விற்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
Teabag 'used' by Queen Elizabeth selling for $12K on eBay after death pic.twitter.com/ulxUBwggW4
— SAY CHEESE! (@SaycheeseDGTL) September 9, 2022
அப்படி என்ன பொருளாக இருக்கும் என்றால் 1998ம் விண்ட்சர் கோட்டையில் இருந்து பூச்சிகளை கட்டுப்படுத்தும் வேலையின் போது ராணி எலிசபெத் பயன்படுத்திய டீ பேக் வெளியே கடத்தப்பட்டிருக்கிறது. அந்த டீ பேக்தான் தற்போது ebay ஆன்லைன் தளத்தில் விற்கப்பட்டிருக்கிறது என செய்திகள் வெளியாகியிருக்கிறது,
இதுபோக, அந்த டீபேக் ராணி பயன்படுத்தியதுதானா என்ற சந்தேகம் எழுந்துள்ளதால் அந்த ஆன்லைன் நிறுவனம், இன்ஸ்டிடியூட் ஆஃப் எக்ஸலன்ஸ் (IECA)வழங்கிய உறுதி சான்றிதழும் அதனோடு இணைத்துள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்