அதிமுக பொதுக்குழு செல்லாது என்ற தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்கிறது.
ஜூலை 11ல் நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லாது என்ற நீதிபதி ஜெயச்சந்திரனின் தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி மேல்முறையீடு செய்திருந்தார். இந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் துரைசாமி, சுந்தர்மோகன் அமர்வு வெள்ளிக்கிழமை தீர்ப்பளிக்க உள்ளது. முன்னதாக கடந்த ஆகஸ்ட் 25 ஆம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது தனி நீதிபதி தீர்ப்பில் பல தவறுகள் இருப்பதாக ஈபிஎஸ் தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன.
தனி நீதிபதி உத்தரவு காரணமாக கட்சி நடவடிக்கைகள் ஸ்தம்பித்து விட்டதாகவும் தெரிவித்தனர். உள்கட்சி விவகாரத்தில் தலையிடும் வகையிலும், வழக்கு கோரிக்கையை மீறி உள்ளதாலும், தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என வாதிட்டனர். அந்த மேல்முறையீடு மனுக்களில் சென்னை உயர் நீதிமன்றம் இன்று காலை 10:30 மணிக்கு உத்தரவு பிறப்பிக்க உள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
https://ift.tt/vZNarQgஅதிமுக பொதுக்குழு செல்லாது என்ற தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்கிறது.
ஜூலை 11ல் நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லாது என்ற நீதிபதி ஜெயச்சந்திரனின் தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி மேல்முறையீடு செய்திருந்தார். இந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் துரைசாமி, சுந்தர்மோகன் அமர்வு வெள்ளிக்கிழமை தீர்ப்பளிக்க உள்ளது. முன்னதாக கடந்த ஆகஸ்ட் 25 ஆம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது தனி நீதிபதி தீர்ப்பில் பல தவறுகள் இருப்பதாக ஈபிஎஸ் தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன.
தனி நீதிபதி உத்தரவு காரணமாக கட்சி நடவடிக்கைகள் ஸ்தம்பித்து விட்டதாகவும் தெரிவித்தனர். உள்கட்சி விவகாரத்தில் தலையிடும் வகையிலும், வழக்கு கோரிக்கையை மீறி உள்ளதாலும், தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என வாதிட்டனர். அந்த மேல்முறையீடு மனுக்களில் சென்னை உயர் நீதிமன்றம் இன்று காலை 10:30 மணிக்கு உத்தரவு பிறப்பிக்க உள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்