ரயில்வே பணிகளுக்கான தேர்வுகள் நேர்மையான முறையில் நடைபெறுவதாக ரயில்வே தேர்வாணையம் விளக்கம் அளித்துள்ளது.
ரயில் பாதை பராமரிப்பு பணியாளர், தொழில்நுட்ப உதவியாளர் போன்ற பதவிகளுக்கான காலியிடங்களுக்கு 2019ஆம் ஆண்டு விண்ணப்பங்கள் கோரப்பட்டன. அதற்காக 3 கட்ட தேர்வுகள் நடைபெற்ற நிலையில், செப்டம்பர் 19ஆம் தேதி முதல் 4-ம் கட்ட தேர்வுகள் நடைபெற்று வருகின்றன.
முறைகேடுகளை தடுக்க கேள்வித்தாளை வேறு எவரும் அணுகாத வண்ணம் 256 அளவு இலக்க கணினி குறியீட்டில் சேமிக்கப்படுவதாக விளக்கமளித்துள்ள ரயில்வே தேர்வாணையம், முறைகேடுகளில் ஈடுபட முயன்ற 108 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. நேர்மையான முறையில் ரயில்வே தேர்வுகள் நடைபெறுவதாகவும் ரயில்வே தேர்வாணையம் விளக்கம் அளித்திருக்கிறது.
இதையும் படிக்க: திருப்பதி தேவஸ்தானத்துக்கு ரூ.1.02 கோடி நன்கொடை அளித்து நெகிழ்ந்த முஸ்லிம் தம்பதி!
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்