உத்தரப்பிரதேசத்தில் லிஃப்டில் நின்றுக்கொண்டிருந்த சிறுவனை தனது வளர்ப்பு நாய் கடித்தும் கண்டுக்கொள்ளாமல் அந்நாயின் உரிமையாளர் வேடிக்கைப் பார்த்த சம்பவத்தின் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத் ராஜ்நகர் எக்ஸ்டென்ஷன் பகுதியில் உள்ளது சார்ம்ஸ் கேஸ்டில் ஹவுசிங் சொசைட்டி. இந்த அடுக்குமாடி குடியிருப்பில் நேற்று முன்தினம் மாலை சுமார் 6 மணியளவில், லிஃப்டில் சிறுவன் ஒருவன் புத்தகைப் பையுடன் நின்றுக் கொண்டிருந்த நிலையில், அந்த லிஃப்டில் வளர்ப்பு நாய் ஒன்றுடன் பெண் ஒருவர் வந்துள்ளார். மேலும் லிஃப்டில் நாய் இருந்ததைக் கண்டு மற்றவர்கள் ஏறாமல் இருந்துள்ளனர்.
பின்னர் லிஃப்ட் கதவுகள் மூடியதும், பயத்தில் சிறுவன் ஃலிஃப்ட் கதவு பக்கம் செல்ல, அப்போது அங்கே இருந்த நாய் அந்த சிறுவனின் காலில் கடித்துவிட்டது. இதனால் வலியால் துடித்த அந்த சிறுவன் கால்களை தூக்கிக் கொண்டு குதித்துக்கொண்டே பதறியுள்ளார். ஆனால் இதனைக் கண்டும் கொஞ்சம் கூட இரக்கமின்றி, நாயின் உரிமையாளர் எதுவும் செய்யாமல் அமைதியாகச் சிறுவனை வேடிக்கைப் பார்த்துள்ளார்.
a pet dog bites a kid in the lift while the pet owner keeps watching even while the pet owner the kid is in pain! where is the moral code here just cos no one is looking?
— Akassh Ashok Gupta (@peepoye_) September 6, 2022
.
.
p.s: @ghaziabadpolice
Location: Charms Castle, Rajnagar Extension, Ghaziabad
Dtd: 5-Sep-22 | 6:01 PM IST pic.twitter.com/Qyk6jj6u1e
பின்னர், நாயின் பின்பக்கம் சிறுவன் செல்ல, அந்தப் பெண் தனது தளம் வந்ததும் லிஃப்ட்டைவிட்டு செல்ல முயன்றார். அப்போதும் நாய், சிறுவனை கடிக்க முயற்சித்தது. ஆனால் இதனைக் கண்டுக்கொள்ளாமல் நாயின் உரிமையாளரான அந்தப் பெண் எந்த சலனமின்றி சென்று விட்டார். பின்னர் லிஃப்டில் ஏறிய நபர் ஒருவர், சிறுவன் வலியால் துடித்ததைக் கண்டு பதறிப்போய் என்னவென்று விசாரித்துள்ளார்.
அதற்கு சிறுவன் வலியுடன் நாய் கடித்தது குறித்து விளக்கம் கூறிக்கொண்டிருந்தான். இது தொடர்பான சி.சி.டி.வி காட்சிகள் இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து நெட்டிசன்கள் பலரும் அந்த பெண்மணியை வசைபாடிய நிலையில், சிறுவனின் பெற்றோர், நண்டிக்ராம் காவல்நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் அந்தப் பெண் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
In the month of april this dog attacked me in the life as like as this child in the same #charms castle society raj nagar extension ghaziabad and lady owner of pet was laughing like this you could see in this video as well this dog is voilent and lady is shameless as well pic.twitter.com/uXU94MpATz
— Nitin shankar (@Nitinshankar15) September 6, 2022
இந்நிலையில், புதிய வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில் நாய் கடித்த சிறுவனின் தந்தையும், வளர்ப்பு நாய் வைத்திருந்த பெண்ணும் சரமாரியாக வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் அந்த வீடியோவில், அந்தப் பெண் தனது தவறை ஒப்புக்கொள்ளவோ அல்லது பிளாட் எண்ணை கூற மறுப்பதாக அந்த வீடியோவில் சிறுவனின் தந்தை வாக்குவாதத்தில் ஈடுபடும் வகையில் இருக்கிறது. இதற்கிடையில், காசியாபாத் நகராட்சி, அந்தப் பெண்ணுக்கு 5,000 ரூபாய் அபராதம் விதித்துள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்