இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழ்நாடு மீனவர்களை விரைவில் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இலங்கை கடற்படையால் கடந்த 20 ஆம் தேதி புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 8 மீனவர்கள் கைது செய்யப்பட்டதையும், அவர்களின் விசைப்படகு பறிமுதல் செய்யப்பட்டதையும் வெளியுறவுத்துறை அமைச்சரின் கவனத்துக்கு கொண்டுவருவதாக முதலமைச்சர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். ஏற்கனவே 95 மீன்பிடி படகுகளும், 11 மீனவர்களும் இலங்கை அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதாக கடிதத்தில் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அண்மையில் 12 தமிழக மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டதில் வெளியுறவுத்துறை அமைச்சகம் எடுத்த ஒருங்கிணைந்த முயற்சிகளுக்கு தனது நன்றியை தெரிவிப்பதாக கூறியுள்ள முதலமைச்சர், கைது செய்யப்பட்ட மீனவர்களையும், அவர்களின் மீன்பிடிபடகுகளையும் விடுவிக்க உரிய தூதரக நடவடிக்கைகள் வாயிலான தீவிர முயற்சி மேறகொள்ளுமாறு கடிதத்தில் வலியுறுத்தி உள்ளார்.
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழ்நாடு மீனவர்களையும் அவர்களது விசைப்படகுகளையும் விரைவில் விடுவிக்க வலியுறுத்தி மாண்புமிகு ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் @DrSJaishankar அவர்களுக்கு மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் கடிதம் எழுதியுள்ளார். pic.twitter.com/QJl5O1Hrrk
— CMOTamilNadu (@CMOTamilnadu) September 20, 2022
இதையும் படிக்க: அதிகரிக்கும் சீசனல் நோய்கள்: அரசு சார்பில் மாநிலம் முழுவதும் இன்று `சிறப்பு முகாம்'
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்