Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

”வேகப்பந்துவீச்சுக்கு எதிராக அவரது திறமை ஈடு இணையற்றது”- ரோகித் குறித்து தினேஷ் கார்த்திக்

ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 2வது டி20 போட்டியில் வென்ற பிறகு பேசியிருக்கும் தினேஷ் கார்த்திக், வேகப்பந்துவீச்சுக்கு எதிராக ரோகித் சர்மாவின் திறமை எதற்கும் குறைந்தது இல்லை என்று புகழ்ந்துள்ளார்.

ஆஸ்திரேலிய அணி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடிவருகிறது. இந்நிலையில் 20 ஆம் தேதி நடந்த முதல் போட்டியில் இந்திய அணி வலுவான 208 என்ற இலக்கை நிர்ணயித்த போதிலும் அதிரடியாக விளையாடி 4 பந்துகள் மிச்சம் இருக்கும் நிலையில் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அணி அபார வெற்றி பெற்றது.

image

இந்திய அணியின் தோல்வி ஆசியகோப்பையிலிருந்து தொடர்ந்து கொண்டே இருந்ததால், இந்திய அணியின் மீது பல்வேறு விமர்சனங்கள் வைக்கப்பட்டது. இந்நிலையில் தொடரின் 2ஆவது டி20 போட்டி நேற்று நாக்பூரில் நடைபெற்றது. ஆடுகளத்தின் ஈரப்பதம் காரணமாக தாமதமாக தொடங்கப்பட்ட போட்டி இரு அணிகளுக்கும் தலா 8 ஓவர்கள் என 16 ஓவர்கள் போட்டியாக மாற்றப்பட்டு நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார். பிறகு களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி அதிரடியாக விளையாடி 8 ஓவர்களில் 90 ரன்கள் சேர்த்தது. 91 ரன்களை இலக்காக கொண்டு களமிறங்கிய இந்திய அணி ரோகித் சர்மாவின் அதிரடி ஆட்டத்தின் உதவியால் 4 பந்துகள் மிச்சம் இருக்கும் நிலையில் வெற்றி பெற்றது. ரோகித் சர்மா 4 பவுண்டரிகள், 4 சிக்சர்கள் விளாசி 46 ரன்களுடன் இறுதிவரை களத்தினில் இருந்தார். இறுதியில் களமிறங்கிய தினேஷ் கார்த்திக் 9 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் சிக்சர், பவுண்டரி என விளாசி 2 பந்துகளில் போட்டியை முடித்து வைத்தார்.

image

போட்டிக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த தினேஷ் கார்த்திக், ”நான் சமீப காலமாக ஃபினிசிங் ரோலில் விளையாடவே பயிற்சி எடுத்து வருகிறேன். கடந்த ஐபிஎல்லில் ஆர்சிபி அணிக்கும் அதையே தான் செய்திருந்தேன். விக்ரம் ரத்தோர் மற்றும் ராகுல் டிராவிட் எனக்கு அதற்கான இடத்தை அளித்திருக்கின்றனர். நான் இந்த போட்டிக்கென புதிதாக எதையும் முயற்சிக்கவில்லை. ரோஹித் சர்மா அற்புதமாக விளையாடினார். எனக்கு இரண்டு பந்துகள் கிடைத்தன, அதனால் நான் என்னால் முடிந்த அனைத்தையும் முயற்சித்தேன்” என்று பேசினார்.

image

பின்னர் ரோகித் சர்மா குறித்து பேசிய அவர், புதிய பந்திற்கு எதிராக, திறனுள்ள பந்து வீச்சாளர்களுக்கு எதிராக இதுபோன்ற ஷாட்களை ஆடுவது எளிதானது அல்ல. ரோஹித் ஏன் இவ்வளவு பெரிய வீரர் என்பதை இது காட்டுகிறது. இந்திய கிரிக்கெட் மட்டுமின்றி உலக கிரிக்கெட்டிலும் வேகப்பந்து வீச்சுக்கு எதிராக விளையாடும் அவரது திறமை எதற்கும் இரண்டாம்பட்சமாக இல்லை, அது தான் அவரை உண்மையிலேயே சிறப்பானதாக ஆக்குகிறது என்று புகழ்ந்து பேசினார்.

image

மேலும் அக்சர் பட்டேல் முன்னால் அனுப்பப்படுவதற்கு, போட்டியின் சூழ்நிலைக்கு தகுந்தவாறு அந்த முடிவு எடுக்கப்படுகின்றது என்றும், ரிஷப் பண்ட் குறித்த கேள்விக்கு அவர் ஒரு அற்புதமான வீரர், ரிஷப் பந்தின் தரம் பற்றி அனைவருக்கும் தெரியும், ஆம் அவரால் பேட்டிங் செய்ய முடியவில்லை, ஆனால் அவர் தரத்தை எப்போதும் மேசைக்கு கொண்டு வருவார் என்பதை நாங்கள் அனைவரும் அறிவோம் என்று தெரிவித்தார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

https://ift.tt/vJoj91z

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

கருத்துரையிடுக

0 கருத்துகள்