Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

திருவாரூர்: அரசு பேருந்துகளின் கண்ணாடிகள் உடைப்பு; 4 பேர் கைது

திருவாரூர் புதிய பேருந்து நிலையத்தில் நின்றிருந்த 3 அரசு பேருந்துகளின் கண்ணாடிகளை உடைத்துச் சென்ற நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.

திருவாரூர் விளமல் பகுதியில் உள்ள புதிய பேருந்து நிலையத்தில் கடந்த 21-ஆம் தேதி இரவு இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்தபடி வந்த மர்ம நபர்கள் அங்கு நின்றிருந்த மூன்று அரசு பேருந்துகளின் கண்ணாடிகளை கற்களால் உடைத்து விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

image

இது தொடர்பாக தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்ததில் திருவாரூர் பணிமனைக்கு சொந்தமான 2 பேருந்துகளும், மயிலாடுதுறை பணிமனைக்கு சொந்தமான ஒரு பேருந்து என 3 பேருந்துகளின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

இதையடுத்து கண்ணாடிகளை உடைத்த மர்ம நபர்கள் யார் என்பது குறித்து போலீசார் பேருந்து நிலையத்தில் உள்ள கடைகளில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் இந்த சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.

image

இதைத் தொடர்ந்து திருவாரூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடிவந்த நிலையில், இந்த குற்ற சம்பவத்தில் ஈடுபட்டதாக சாகுல் ஹமீது, அஹமத்துல்லா, முகமது, ஹாஜா நவாஸ் ஆகிய நான்கு பேரை கைது செய்த போலீசார், அவர்களிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

https://ift.tt/LvtCzwP

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

கருத்துரையிடுக

0 கருத்துகள்