தினேஷ் கார்த்திக் மற்றும் ரிஷப் பண்ட் இருவரும் அணிக்குள் விளையாட முடியாது என்றும், வெறும் 10-15 பந்துகள் மட்டும் விளையாடும் ஒரு வீரரை எப்படி அணிக்குள் எடுப்பீர்கள் என்றும் தினேஷ் கார்த்திக் மற்றும் ரிஷப் பண்ட் தேர்வு குறித்து பேசியுள்ளார் முன்னாள் இந்திய வீரர் கவுதம் காம்பீர்.
பிசிசிஐ டி20 உலககோப்பைக்கான இந்திய அணியை அறிவித்ததிலிருந்தே ஷமி முதன்மை அணிக்குள் எடுக்காதது குறித்தும், ரிஷப் பண்ட் மற்றும் தினேஷ் கார்த்திக் இருவரில் யார் ஆடும் அணியில் இடம்பிடிப்பார் என்பது குறித்தும் பல்வேறு பார்வைகளும் விவாதங்களும் வைக்கப்பட்டு வருகிறது. அதில் பெரிய பிரச்சனையாக இருந்து வருவது ரிஷப் மற்றும் தினேஷ் கார்த்திக் பிரச்சனை தான். இரண்டு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்களில் யாரை ஆடும் 11ல் பங்கேற்க வைக்கப்போகிறீர்கள் என்ற கேள்வி இருந்துகொண்டே வருகிறது. ரிஷப் பண்ட் இல்லை என்றால் அணிக்கும் ஒரு இடது கை பேட்ஸ்மேன் கூட இல்லாமல் போய்விடும் என்பதால் தொடர்ந்து தினேஷ் கார்த்திக்கை விட ரிஷப் பண்ட்டுக்கே முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தினேஷ் காத்திக் மற்றும் ரிஷப் பண்ட் இருவரும் ஒன்று சேர்ந்து விளையாட முடியுமா என்பது குறித்து பேசியிருக்கிறார் முன்னாள் இந்திய வீரர் கவுதம் காம்பீர். அவர் பேசுகையில், “ அது முடியாது, இரண்டு வீரர்களையும் உங்களால் அணிக்குள் ஆட வைக்க முடியாது. அதை நீங்கள் செய்ய விரும்பினால் அணியில் 6ஆவது பந்துவீச்சாளரை நீங்கள் இழக்க நேரிடும். இருவரையும் அணிக்குள் ஆட வைக்க வேண்டுமானால் சூரியகுமார் யாதவ் அல்லது கேஎல் ராகுல் இருவரில் ஒருவரை டிராப் செய்துவிட்டு தான் செய்யமுடியும் என்றும், இல்லையேல் அக்சர் பட்டேல் ஆடும்பட்சத்தில் ரிஷப் பண்டிற்க்கு பதிலாக தினேஷ் கார்த்திக்கை ஆட வைக்கலாம்” என்று கூறியுள்ளார்.
ஆனால் தினேஷ் கார்த்திக் தேர்வை விரும்பவில்லை என்று பேசிய அவர், “ அணியில் இடது, வலது கை பேட்டர்கள் என்பது முக்கியமில்லை, நிலைத்து நின்று ஆடி அணிக்கு வெற்றியை தேடித்தரும் வீரர் தான் அணிக்கு தேவை. அப்படி பார்த்தால் தினேஷ் கார்த்திக் முதல் 5 இடங்களில் விளையாட விரும்பதுவதில்லை, வெறும் 10-15 பந்துகள் மட்டும் விளையாடும் ஒரு வீரரை எப்படி நீங்கள் அணிக்குள் எடுப்பீர்கள். ரிஷப் பண்ட் ஒரு மேட்ச் வின்னிங் வீரர், எனது அணி தேர்வில் நிச்சயம் தினேஷ் கார்த்திக் முன்பு ரிஷப் பண்ட் தான் இருப்பார்” என்று தெரிவித்து உள்ளார்.
தினேஷ் கார்த்திக்கிற்கு பதிலாக ஆசியகோப்பையில் ரிஷப் பண்ட் விளையாடி நிலையில், அவர் சரியாக விளையாடாமல் தொடர்ந்து சொதப்பி வந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அணியில் தினேஷ் கார்த்திக்கா இல்லை ரிஷப் பண்ட்டா என்ற கேள்வி இன்னும் அதிகமாகவே எழுகிறது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
https://ift.tt/2grVNhiதினேஷ் கார்த்திக் மற்றும் ரிஷப் பண்ட் இருவரும் அணிக்குள் விளையாட முடியாது என்றும், வெறும் 10-15 பந்துகள் மட்டும் விளையாடும் ஒரு வீரரை எப்படி அணிக்குள் எடுப்பீர்கள் என்றும் தினேஷ் கார்த்திக் மற்றும் ரிஷப் பண்ட் தேர்வு குறித்து பேசியுள்ளார் முன்னாள் இந்திய வீரர் கவுதம் காம்பீர்.
பிசிசிஐ டி20 உலககோப்பைக்கான இந்திய அணியை அறிவித்ததிலிருந்தே ஷமி முதன்மை அணிக்குள் எடுக்காதது குறித்தும், ரிஷப் பண்ட் மற்றும் தினேஷ் கார்த்திக் இருவரில் யார் ஆடும் அணியில் இடம்பிடிப்பார் என்பது குறித்தும் பல்வேறு பார்வைகளும் விவாதங்களும் வைக்கப்பட்டு வருகிறது. அதில் பெரிய பிரச்சனையாக இருந்து வருவது ரிஷப் மற்றும் தினேஷ் கார்த்திக் பிரச்சனை தான். இரண்டு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்களில் யாரை ஆடும் 11ல் பங்கேற்க வைக்கப்போகிறீர்கள் என்ற கேள்வி இருந்துகொண்டே வருகிறது. ரிஷப் பண்ட் இல்லை என்றால் அணிக்கும் ஒரு இடது கை பேட்ஸ்மேன் கூட இல்லாமல் போய்விடும் என்பதால் தொடர்ந்து தினேஷ் கார்த்திக்கை விட ரிஷப் பண்ட்டுக்கே முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தினேஷ் காத்திக் மற்றும் ரிஷப் பண்ட் இருவரும் ஒன்று சேர்ந்து விளையாட முடியுமா என்பது குறித்து பேசியிருக்கிறார் முன்னாள் இந்திய வீரர் கவுதம் காம்பீர். அவர் பேசுகையில், “ அது முடியாது, இரண்டு வீரர்களையும் உங்களால் அணிக்குள் ஆட வைக்க முடியாது. அதை நீங்கள் செய்ய விரும்பினால் அணியில் 6ஆவது பந்துவீச்சாளரை நீங்கள் இழக்க நேரிடும். இருவரையும் அணிக்குள் ஆட வைக்க வேண்டுமானால் சூரியகுமார் யாதவ் அல்லது கேஎல் ராகுல் இருவரில் ஒருவரை டிராப் செய்துவிட்டு தான் செய்யமுடியும் என்றும், இல்லையேல் அக்சர் பட்டேல் ஆடும்பட்சத்தில் ரிஷப் பண்டிற்க்கு பதிலாக தினேஷ் கார்த்திக்கை ஆட வைக்கலாம்” என்று கூறியுள்ளார்.
ஆனால் தினேஷ் கார்த்திக் தேர்வை விரும்பவில்லை என்று பேசிய அவர், “ அணியில் இடது, வலது கை பேட்டர்கள் என்பது முக்கியமில்லை, நிலைத்து நின்று ஆடி அணிக்கு வெற்றியை தேடித்தரும் வீரர் தான் அணிக்கு தேவை. அப்படி பார்த்தால் தினேஷ் கார்த்திக் முதல் 5 இடங்களில் விளையாட விரும்பதுவதில்லை, வெறும் 10-15 பந்துகள் மட்டும் விளையாடும் ஒரு வீரரை எப்படி நீங்கள் அணிக்குள் எடுப்பீர்கள். ரிஷப் பண்ட் ஒரு மேட்ச் வின்னிங் வீரர், எனது அணி தேர்வில் நிச்சயம் தினேஷ் கார்த்திக் முன்பு ரிஷப் பண்ட் தான் இருப்பார்” என்று தெரிவித்து உள்ளார்.
தினேஷ் கார்த்திக்கிற்கு பதிலாக ஆசியகோப்பையில் ரிஷப் பண்ட் விளையாடி நிலையில், அவர் சரியாக விளையாடாமல் தொடர்ந்து சொதப்பி வந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அணியில் தினேஷ் கார்த்திக்கா இல்லை ரிஷப் பண்ட்டா என்ற கேள்வி இன்னும் அதிகமாகவே எழுகிறது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்