போக்குவரத்து விதிகள் உள்ளிட்ட பல அறிவிப்புகள், எச்சரிக்கைகளை இணையவாசிகளை போன்று மக்களுக்கு மீம் வாயிலாக தெரியப்படுத்துவதை பல பகுதிகளிலும் போலீசார் கையாண்டு வருகிறார்கள். இதனால் விஷயம் மக்களுக்கு எளிதில் சென்று சேர்வதும் தவறுவதில்லை.
போலீசாரின் இப்படியான அறிவிப்புகளுக்கு பெரும் வரவேற்பும் அளிக்கப்பட்டு வருகிறத். அந்த வகையில் குலுமணாலி போலீசாரும் அத்தகைய நடைமுறையை கையில் எடுத்துள்ளது. அதன்படி, சாலை பாதுகாப்பு குறித்து குலுவுக்கு வரும் மக்களுக்கு வெளிப்படுத்தும் வகையில், குலு போலீசார் வைத்துள்ள எச்சரிக்கை பலகை பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
அதில், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டாதீர்கள். அப்படி குடித்துவிட்டு வாகனம் ஓட்டினால் ஜெயிலுக்கு செல்ல நேரிடும். மற்ற ஊர்களை போன்று குலுமணாலி ஜெயில் இருக்காது. ஏனெனில், மணாலியில் குளிர் அதிகமாக இருப்பதால் உங்களால் தாங்க முடியாது என பதிவிடப்பட்டிருக்கிறது.
இது தொடர்பான வீடியோ 5 மில்லியன் பார்வையாளர்களால் ரசிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் இதில் என்ன ட்விஸ்ட் என்றால், அந்த எச்சரிக்கை பலகை சுற்றி கஞ்சா செடிகள் நிறைந்த பகுதியில் அமைக்கப்பட்டிருக்கிறது. இது நெட்டிசன்களிடையே பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
View this post on Instagram
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
https://ift.tt/AqD329dபோக்குவரத்து விதிகள் உள்ளிட்ட பல அறிவிப்புகள், எச்சரிக்கைகளை இணையவாசிகளை போன்று மக்களுக்கு மீம் வாயிலாக தெரியப்படுத்துவதை பல பகுதிகளிலும் போலீசார் கையாண்டு வருகிறார்கள். இதனால் விஷயம் மக்களுக்கு எளிதில் சென்று சேர்வதும் தவறுவதில்லை.
போலீசாரின் இப்படியான அறிவிப்புகளுக்கு பெரும் வரவேற்பும் அளிக்கப்பட்டு வருகிறத். அந்த வகையில் குலுமணாலி போலீசாரும் அத்தகைய நடைமுறையை கையில் எடுத்துள்ளது. அதன்படி, சாலை பாதுகாப்பு குறித்து குலுவுக்கு வரும் மக்களுக்கு வெளிப்படுத்தும் வகையில், குலு போலீசார் வைத்துள்ள எச்சரிக்கை பலகை பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
அதில், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டாதீர்கள். அப்படி குடித்துவிட்டு வாகனம் ஓட்டினால் ஜெயிலுக்கு செல்ல நேரிடும். மற்ற ஊர்களை போன்று குலுமணாலி ஜெயில் இருக்காது. ஏனெனில், மணாலியில் குளிர் அதிகமாக இருப்பதால் உங்களால் தாங்க முடியாது என பதிவிடப்பட்டிருக்கிறது.
இது தொடர்பான வீடியோ 5 மில்லியன் பார்வையாளர்களால் ரசிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் இதில் என்ன ட்விஸ்ட் என்றால், அந்த எச்சரிக்கை பலகை சுற்றி கஞ்சா செடிகள் நிறைந்த பகுதியில் அமைக்கப்பட்டிருக்கிறது. இது நெட்டிசன்களிடையே பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
View this post on Instagram
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்