பீகாரில் ஆசிரியர் பணி நியமனம் தாமதப்படுத்தப்படுவதாக கூறி போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞரை கூடுதல் ஆட்சியர் கொடூரமாக தாக்கியது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஆசிரியர் பணி நியமனம் தாமதப்படுத்தப்படுவதை கண்டித்து பாட்னாவில் ஏராளமான இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த சென்ற பாட்னா கூடுதல் ஆட்சியர் கே.கே.சிங், தடியடி நடத்தி கூட்டத்தை கலைக்க உத்தரவிட்டார். அப்போது தேசியக்கொடியுடன் படுத்து போராட்டம் நடத்திய இளைஞரை கூடுதல் ஆட்சியர் கொடூரமாக தாக்கினார்.
இளைஞர் மீது தாக்குதல் நடத்தியது தொடர்பாக விசாரணை நடத்த குழு அமைக்கப்பட்டுள்ளது. தவறிருந்தால் கூடுதல் ஆட்சியர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என பீகார் துணை முதலமைச்சர் தேஜஸ்வி கூறியுள்ளார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
https://ift.tt/g1jWGMxபீகாரில் ஆசிரியர் பணி நியமனம் தாமதப்படுத்தப்படுவதாக கூறி போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞரை கூடுதல் ஆட்சியர் கொடூரமாக தாக்கியது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஆசிரியர் பணி நியமனம் தாமதப்படுத்தப்படுவதை கண்டித்து பாட்னாவில் ஏராளமான இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த சென்ற பாட்னா கூடுதல் ஆட்சியர் கே.கே.சிங், தடியடி நடத்தி கூட்டத்தை கலைக்க உத்தரவிட்டார். அப்போது தேசியக்கொடியுடன் படுத்து போராட்டம் நடத்திய இளைஞரை கூடுதல் ஆட்சியர் கொடூரமாக தாக்கினார்.
இளைஞர் மீது தாக்குதல் நடத்தியது தொடர்பாக விசாரணை நடத்த குழு அமைக்கப்பட்டுள்ளது. தவறிருந்தால் கூடுதல் ஆட்சியர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என பீகார் துணை முதலமைச்சர் தேஜஸ்வி கூறியுள்ளார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்