Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

நடுக்கடலில் ராமேஸ்வரம் மீனவர்களுக்காக இலங்கை கடற்படை செய்த மனிதாபிமான செயல்- நடந்தது என்ன?

https://ift.tt/cRwSAGt

ராமேஸ்வரம் மீனவரின் விசைப்படகு நடுக்கடலில் பழுதடைந்து காற்றின் வேகத்தால் இலங்கை கடல் பகுதிக்குச் சென்ற விசைப்படகை கயிறு கட்டி இழுத்து சக மீனவர்களிடம் ஒப்படைத்த இலங்கை கடற்படைக்கு ராமேஸ்வரம் மீனவர்கள் நன்றி தெரிவித்தனர்.

ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து சேகர் பாண்டியன் என்பவருக்குச் சொந்தமான விசைப்படகில் நேற்றிரவு மீன் பிடிக்க கடலுக்குச் சென்றனர். இந்த நிலையில் நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது விசைப்படகு இஞ்சினில் கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து விசைப்படகில் இருந்த ஆறு மீனவர்களும் என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்துக் கொண்டிருந்தனர்.

image

இதையடுத்து காற்றின் வேகத்தின் காரணமாக பழுதான விசைப்படகு இலங்கை கடல் பகுதியான மன்னார் பகுதிக்குச் சென்றது. அப்போது, அப்பகுதிக்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் பழுதான ராமேஸ்வரம் மீனவர்களின் படகை கயிறு கட்டி கொண்டு வந்து சக மீனவர்களிடம் ஒப்படைத்து வழியனுப்பி வைத்தனர்.

இதைத் தொடர்ந்து ராமேஸ்வரம் மீனவர்கள் இலங்கை கடற்படையின் மனிதாபமான செயலுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

கருத்துரையிடுக

0 கருத்துகள்