தமிழக முதலமைச்சர் தங்களுக்கு வழங்கிய நலத்திட்ட உதவிகளை தங்களுக்கு வழங்காமல் அதிகாரிகள் மெத்தனம் காட்டுவதாக நரிக்குறவர் இனத்தை சேர்ந்த பெண் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர். சில மாதங்களுக்கு முன் இப்பெண்ணின் வீட்டிற்கு நேரடியாக சென்று அவருக்கு உதவிகள் வழங்குவதாக முதல்வர் ஸ்டாலின் உறுதியளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் நகரப்பகுதியில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாக விளங்கும் பிரசித்திப் பெற்ற ஸ்தலசயன பெருமாள் கோயில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் அமைந்துள்ளது. இக்கோயிலில் தமிழக அரசின் அன்னதான திட்டத்தின் கீழ் நாள்தோறும் 100 நபர்களுக்கு கோயில் வளாகத்தில் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. இதில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு நரிக்குறவ சமுதாயத்தை சேர்ந்த பெண்ணொருவர் உள்பட சிலர் கோயிலில் வழங்கப்பட்ட அன்னதானத்தை சாப்பிடுவதற்கு சென்றிருந்தனர். அங்கு அவர்களிடம் `முதல் பந்தியில் நீங்கள் அமரக்கூடாது’ என்றும், `சாப்பாடு இல்லை’ எனக்கூறி அனுப்பிவிட்டதாகவும் அம்மக்கள் குற்றச்சாட்டை முன்வைத்தனர். அவர்களில் ஒருவரான அஸ்வினி என்ற நரிக்குறவ பெண், இந்த குற்றச்சாட்டை சமூகவலைதளங்களில் தெரிவித்திருந்தார். அந்த வீடியோ, வைரலானது.
வீடியோ வைரலானதை தொடர்ந்து, அப்பெண் மற்றும் அன்றைய தினம் பாதிக்கப்பட்ட அச்சமூகத்தை சேர்ந்த பிற மக்களின் இருப்பிடம் அறியப்பட்டது. அப்படியாக மாமல்லபுரம் அடுத்த பூஞ்சேரி பகுதியில் வசிக்கும் அஸ்வினி மற்றும் பிற நரிக்குறவ சமுதாய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்குவதற்கு அரசு முடிவுசெய்தது. அதன்படி கடந்த நவம்பர் மாதம் முதல்வர் மு.க.ஸ்டாலின் பூஞ்சேரி பகுதிக்கு நேரில் சென்றிருந்தார். நரிக்குறவர் மற்றும் இருளர் மக்கள் என 81 பயனாளிகளுக்கு வீட்டு மனை பட்டா உள்பட பல்வேறு நலத்திட்ட உதவிகளை நேரில் வழங்கினார்.
இந்நிலையில் தங்களுக்கு வழங்கப்பட்ட நிதி உதவி எதையும் வங்கியினர் வழங்கவில்லை என்றும் தாங்கள் பட்டா, ஆதார், பான் கார்டு போன்ற ஆவணங்களை அளித்தும் கூட மேலும் சில ஆதாரங்கள் தேவை என அதிகாரிகள் கேட்பதாகவும் அம்மக்கள் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர். இதுதொடர்பாக மேலும் பேசிய அவர்கள், “கடற்கரை கோயில் அருகே நாங்கள் தொழில் செய்வதற்காக கடைகள் கேட்டிருந்தோம். அதையும் அதிகாரிகள் வழங்கவில்லை. குடியிருப்பு பகுதியில் கழிவறை போன்ற வசதிகள் இன்னும் செய்து தரவில்லை” என்று கூறியுள்ளனர்.
இதுதொடர்பாக முன்பு நடந்த நிகழ்வின் போது தங்களின் பிரச்னைகளை சரி செய்து தரக்கோரிய அஸ்வினி, தன் சமூக மக்களுடன் மாவட்ட ஆட்சியரிடம் நேரில் நேற்றைய தினம் மனு அளித்துள்ளனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்