கள்ளக்குறிச்சி மாவட்டம் தனியார் பள்ளியில் 12-ஆம் வகுப்பு பயின்று வந்த மாணவி மரண விவகாரத்தில் அவரது உடலை ஜூலை 13 அன்று புதன்கிழமை காலை 5 மணிக்கு பள்ளியில் வேலை செய்யும் ஊழியர்கள் தூக்கிச் செல்வது போன்ற காட்சி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் கனியாமூர் தனியார் பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவி ஜூலை 13 அன்று மரணமடைந்தார். மாணவி மரணம் தற்கொலை என்று பள்ளி நிர்வாகம் தெரிவிக்க, அதில் சந்தேகம் இருப்பதாக பெற்றோர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மாணவி உயிரிழப்புக்கு நீதி கேட்டு கடந்த 17ஆம் தேதி நடைபெற்ற போராட்டம் வன்முறையாக மாறியது. இதில் தனியார் பள்ளி சூறையாடப்பட்டதோடு காவல்துறை வாகனங்கள் உட்பட ஏராளமான வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன.
இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த சிறப்புக் குழுவினர் குழு அமைத்து தமிழக டிஜிபி சைலேந்தரபாபு உத்தரவிட்டார். மாணவி மரணம் தொடர்பான வழக்கும் சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், புதிய தலைமுறைக்கு பிரத்யேக பேட்டியளித்த மாணவியின் பெற்றோர் பல அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினர்.
முன்பு ஜூலை 12-ஆம் தேதி இரவு 9 மணியளவில் மாணவி பள்ளி வளாகத்தில் உலாவும் சிசிடிவி காட்சிகள் எனக் குறிப்பிட்டு சில காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியான நிலையில், தற்போது மேலும் ஒரு சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. அக்காட்சியில் ஜூலை 13 அன்று புதன்கிழமை காலை 5 மணிக்கு பள்ளியில் வேலை செய்யும் ஊழியர்கள் மாணவி உடலை தூக்கிச் செல்லும் நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. போலீஸ் விசாரணை பல்வேறு கோணங்களில் நடைபெற்று வரும் இக்காட்சிகள் வெளியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்