Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

ஒரே நிமிடம்தான்.. மனித குலத்திற்கு பாடம் கற்பித்த சிறுவர்கள்.. வைரல் வீடியோ!

குழந்தைகளிடையே இருக்கும் அன்பும் குணநலனும் பெரியவர்களிடத்தில் கூட இருக்குமா என்பது ஐயம் தான். ஏனெனில் எந்தவொரு கள்ளம் கபடமும் இல்லாமல் எந்த பாகுபாடும் பார்க்காமல் அனைவரிடத்தில் அன்பு பாராட்டும் வழக்கம் குழந்தைகளாக இருக்கும்போதுதான் வெளிப்படும். ஆகையாலேயே வளர்ந்த பிறகும் குழந்தையாகவே இருந்திருக்கலாம் என அனைவரும் கூறுவதை வழக்கமாகக் கொண்டிருப்பர்.

அந்த வகையில், மொழி, இனம் என எந்த காரணிகளையும் காணாது உண்ணதமான அன்பு, விட்டுக்கொடுப்பது, அக்கறை என அனைத்தையும் ஒரே நிமிடத்தில் எடுத்துக் கூறியிருக்கிறது ட்விட்டரில் வைரலாகியுள்ள ஒரு வீடியோ.

அதில், டிராஃபிக் சிக்னலில் நின்றுக் கொண்டிருந்த காரை வெளியே இருந்து ஒரு சிறுவன் துடைத்துக் கொண்டிருக்க, காருக்குள் இருக்கும் ஒரு சிறுவன் தன்னிடம் இருந்த பொம்மை காரை வெளியே இருக்கும் சிறுவனுக்கு கொடுக்கிறான். 

அந்த சிறுவனோ சில நொடிகள் அதை வைத்து விளையாடிவிட்டு மீண்டும் காருக்குள் இருக்கும் சிறுவனிடம் கொடுக்க, அவனோ நீயே வைத்துக்கொள் என பெருமிதத்தோடு கொடுக்கிறான்.

அந்த காரை வாங்கிக்கொண்டு ஓடிய சிறுவன், சிப்ஸ் பாக்கெட் ஒன்றை கொண்டு வந்து காரில் உள்ள சிறுவனிடம் கொடுக்க, அதனை இருவரும் எந்தவித பேதமும் இல்லாமல் பகிர்ந்து உண்கிறார்கள். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இந்த வீடியோ பகிரப்பட்டிருந்தாலும் இதுவரையில் ஏழரை மில்லியன் பார்வையாளர்களை ஈர்த்து இன்னமும் பார்க்கப்பட்டு வருகிறது.

இந்த வீடியோவை பார்த்த பலரும், சமூகத்திற்கு தேவையான படிப்பினையை இந்த இரு சிறுவர்களும் வழங்கியிருக்கிறார்கள் என்றும், குழந்தைகள்தான் இந்த உலகை ஆள வேண்டும் என பலதரப்பட்ட கருத்துகளை தெரிவித்துள்ளனர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

https://ift.tt/6n7Py98

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

கருத்துரையிடுக

0 கருத்துகள்