Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

சாக்லேட் சாப்பிட்டால் போதும் ₹61 லட்சம் சம்பாதிக்கலாம்.. கனடா நிறுவனத்தின் அசத்தல் ஆஃபர்!

சாக்லேட்டுகள் சாப்பிட உங்களுக்கு எந்த அளவுக்கு பிடிக்கும்? அப்படி சாக்லேட்டுகளை சாப்பிடுவோருக்கு சம்பளமும் கொடுத்தால் எப்படி இருக்கும்? கரும்பு திண்ண கூலியா என்பது போல டபுள் தமாக்கா ஆஃபரை வழங்கியிருக்கிறது கனடாவைச் சேர்ந்த ஒரு கேண்டி நிறுவனம்.

கனடா நாட்டைச் சேர்ந்த Candy Funhouse என்ற நிறுவனத்தில் சாக்லேட்டுகளை ருசி பார்ப்பதற்கென கைத்தேர்ந்த ஆட்களை வேலைக்கு தேவை என அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது. அதுவும் ஆண்டுக்கு 1 லட்சம் டாலர் சம்பளத்தில். இந்திய மதிப்பில் 61 லட்சத்து 14 ஆயிரம் ரூபாய்.

மாதத்திற்கு 3500 சாக்லேட்களை ருசி பார்ப்பதே சீஃப் கேண்டி ஆஃபிசரின் வேலையாக இருக்கும். 5 வயதுக்கு மேலான வடக்கு அமெரிக்காவைச் சேர்ந்த யாராக இருந்தாலும் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.

இந்த வேலையை வீட்டில் இருந்தும் பார்க்கலாம், கம்பெனிக்கு வந்தும் பார்க்கலாம். 5 வயதுக்கு மேலான குழந்தைகள் பெற்றோர்களின் முழு சம்மதத்தோடு வேலை செய்யலாம்.

குறிப்பிடத்தக்க கண்டிஷன் என்னவென்றால் சாக்லேட்களை ருசி பார்ப்பவர்களுக்கு எந்தவொரு ஒவ்வாமையும் இருக்க கூடாது, நல்ல ருசி பார்க்கும் திறன் இருக்க வேண்டும் என கேண்டி ஃபன்ஹவுஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும், சீஃப் கேண்டி ஆஃபிசரா வேலை பார்ப்பவர்கள் பற்களில் கேவிட்டி பிரச்னை வரும் என பயப்பட வேண்டாம். அதற்கான தேர்ந்த பல் மருத்துவ வசதிகளும் வழங்கப்படும் என தெரிவித்துள்ள கேண்டி ஃபன்ஹவுஸ் சாக்லேட்டுகள், பாப் கலாசாரம் மீதான ஆர்வம் கொண்டவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம் எனக் கூறியிருக்கிறது.

image

இது தொடர்பாக பேசியுள்ள கேண்டி ஃபன்ஹவுஸின் சி.இ.ஓ ஜமால் ஹெஜாஸி, “உற்சாகவும், ஆர்வமும் இருப்பவர்களும், இயற்கையாகவே தலைமைப் பண்பை கொண்டவர்களுக்கு இந்த வேலை நல்ல வாய்ப்பை கொடுக்கும் என்பதில் மிகையில்லை. எங்கள் நிறுவனத்தில் எப்போதும் மகிழ்ச்சியாகவே வேலை பார்க்கலாம்.

இந்த வேலைக்கு வருபவர்கள், வாழ்க்கையின் சவாலான சவாரிக்கு தயாராக இருங்கள், நாடி நரம்புகளில் சாக்லேட்டுகள் பாய்வதையும் உணருவீர்கள்” எனக் கூறியுள்ளார்.

கேண்டி ஃபன்ஹவுஸ் நிறுவனத்தில் அறிவிக்கப்பட்டுள்ள இந்த வேலைக்கு விண்ணப்பிக்க ஆகஸ்ட் 31ம் தேதிதான் கடைசிநாளாகும். டொரன்டோவில் இருக்கும் இந்த கேண்டி ஃபன்ஹவுஸ் நிறுவனம் கனடாவின் மிகப்பெரிய ஆன்லைன் கேண்டி ஷாப் ஆகவும் உள்ளது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

https://ift.tt/489FjHP

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

கருத்துரையிடுக

0 கருத்துகள்