ஸ்ரீ பெரும்புதூரிலிருந்து இருசக்கர வாகனத்தில் அம்பத்தூருக்கு கடத்திவரப்பட்ட 4 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.
சென்னை அம்பத்தூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் கஞ்சா புழுக்கம் அதிகம் உள்ளதாக தொடர்ந்து புகார்கள் எழுந்து வந்தது. இந்நிலையில் ஆவடி மாநகர காவல் ஆணையாளர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவின் பேரில் அம்பத்தூர் காவல் உதவி ஆணையர் கனகராஜ் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது இருசக்கர வாகனத்தில் பொட்டலம் பொட்டலமாக கஞ்சாவை எடுத்து வந்த நபரை பிடித்து விசாரணை செய்தனர். அதில், செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் அடுத்த அரசூர் கிராமத்தைச் சேர்ந்த பிரபாகர் )25) என்பவர் என தெரியவந்தது.
இதையடுத்து அவரிடம் மேற்கொண்ட தீவிர விசாரணையில், அடையாளம் தெரியாத நபருக்காக ஸ்ரீபெரும்புதூரில் இருந்து கஞ்சாவை இருசக்கர வாகனத்தில் எடுத்து வந்ததாக குற்றத்தை ஒப்புக் கொண்டார். இவர் மீது மதுராந்தகம், திண்டிவனம் உள்ளிட்ட காவல் நிலையத்தில் கஞ்சா கடத்தல் வழக்கு நிலுவையில் உள்ளதும் தெரியவந்தது.
இதையடுத்து அவரின் இருசக்கர வாகனம், செல்போன் 4 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், பிரபாகர் மீது வழக்குப் பதிவு செய்து அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
https://ift.tt/MVtZ1Ifஸ்ரீ பெரும்புதூரிலிருந்து இருசக்கர வாகனத்தில் அம்பத்தூருக்கு கடத்திவரப்பட்ட 4 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.
சென்னை அம்பத்தூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் கஞ்சா புழுக்கம் அதிகம் உள்ளதாக தொடர்ந்து புகார்கள் எழுந்து வந்தது. இந்நிலையில் ஆவடி மாநகர காவல் ஆணையாளர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவின் பேரில் அம்பத்தூர் காவல் உதவி ஆணையர் கனகராஜ் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது இருசக்கர வாகனத்தில் பொட்டலம் பொட்டலமாக கஞ்சாவை எடுத்து வந்த நபரை பிடித்து விசாரணை செய்தனர். அதில், செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் அடுத்த அரசூர் கிராமத்தைச் சேர்ந்த பிரபாகர் )25) என்பவர் என தெரியவந்தது.
இதையடுத்து அவரிடம் மேற்கொண்ட தீவிர விசாரணையில், அடையாளம் தெரியாத நபருக்காக ஸ்ரீபெரும்புதூரில் இருந்து கஞ்சாவை இருசக்கர வாகனத்தில் எடுத்து வந்ததாக குற்றத்தை ஒப்புக் கொண்டார். இவர் மீது மதுராந்தகம், திண்டிவனம் உள்ளிட்ட காவல் நிலையத்தில் கஞ்சா கடத்தல் வழக்கு நிலுவையில் உள்ளதும் தெரியவந்தது.
இதையடுத்து அவரின் இருசக்கர வாகனம், செல்போன் 4 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், பிரபாகர் மீது வழக்குப் பதிவு செய்து அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்