Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

15 வயதில் போட்ட சபதம்.. 9 வருடத்திற்கு பின் தாயை சந்தித்த மும்பை இந்தியன்ஸ் வீரர்!

https://ift.tt/gnSGH3h

மும்பை இந்தியன்ஸ் அணியை சேர்ந்த சுழற்பந்து வீச்சாளர் குமார் கார்த்திகேயா 9 வருடங்கள் கழித்து தனது குடும்பத்தினரை சந்தித்திருக்கிறார்.

குமார் கார்த்திகேயா 2022ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியில் அறிமுகமானார். இடது கை சுழற்பந்து வீச்சாளரான கார்த்திகேயா தனது முதல் ஐபிஎல் போட்டியில் 19 ரன்களை விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட்டை கைப்பற்றினார். இவர் இந்த உயரத்துக்கு வரக் கடந்துவந்த பாதை கரடுமுரடானது.

தனது 15 வயதிலேயே வீட்டை விட்டு வெளியேறிய கார்த்திகேயா ஒரு தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்துள்ளார். கிரிக்கெட்டில் வாய்ப்பு கிடைத்த பிறகே மீண்டும் வீட்டிற்கு வருவேன் என சபதமும் எடுத்துள்ளார்.

image

2018ம் ஆண்டில் ரஞ்சி டிராபியில் மத்தியபிரதேச அணிக்காக அறிமுகமானார். அதன் பின்னர் கடின உழைப்பின் பலனாக 2022 ஆம் ஆண்டுக்கான மும்பை இந்தியன்ஸ் ஐபிஎல் அணியில் அவருக்கு இடம் கிடைத்தது. ஐபிஎல் தொடர் முடிந்த கையோடு தனது சக வீரர்களுடன் லண்டனுக்கு பயணித்து விட்டார் கார்த்திகேயா.

24 வயதாகும் கார்த்திகேயா நாடு திரும்பியவுடன், 9 வருடம் 3 மாதங்களுக்கு பிறகு தனது தாய் மற்றும் குடும்பத்தினரை சந்தித்துள்ளார். இதுபற்றி அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "என்னுடைய குடும்பத்தினரையும் அம்மாவையும் 9 ஆண்டுகள் 3 மாதங்கள் கழித்து சந்தித்திருக்கிறேன். என்னுடைய உணர்வுகளை வெளிப்படுத்த முடியாத சூழ்நிலையில் உள்ளேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

 9 வருடங்கள் கழித்து தனது அம்மாவை சந்தித்ததாக கார்த்திகேயா தெரிவித்திருப்பது கிரிக்கெட் ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிக்க: தாலிபான் கொடி பொறிக்கப்பட்ட பேனர்கள்.. சென்னை செஸ் ஒலிம்பியாட் தொடரில் சலசலப்பு

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

கருத்துரையிடுக

0 கருத்துகள்