பிரதமர் மோடி வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து சமூகவலைதளங்களில் பதிவிடுவோர் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ள சர்வதேச செஸ் போட்டி நடைபெற இருக்கும் நேரு உள் விளையாட்டு அரங்கில் அமைச்சர்கள் ஏ.வ.வேலு, மெய்யநாதன், சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் ஆகியோர் ஆய்வு செய்தனர். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சங்கர் ஜிவால், ‘’பிரதமர் வருகையை ஒட்டி நேரு உள்விளையாட்டு அரங்கில் 7 அடுக்கு பாதுகாப்பு போடப்பட உள்ளது. இன்று முதல் தீவிர வாகன சோதனை நடைபெறும்.
பாதுகாப்பு காரணங்களுக்காக 28, 29 ஆகிய தேதிகளில் சென்னை மாநகரில் ஹீலியம் பலூன்கள், ட்ரோன்கள் பறக்கவிட தடைவிதிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து சமூகவலைதளங்களில் பதிவிடுவோர் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்று கூறினார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
https://ift.tt/VmfwTNFபிரதமர் மோடி வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து சமூகவலைதளங்களில் பதிவிடுவோர் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ள சர்வதேச செஸ் போட்டி நடைபெற இருக்கும் நேரு உள் விளையாட்டு அரங்கில் அமைச்சர்கள் ஏ.வ.வேலு, மெய்யநாதன், சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் ஆகியோர் ஆய்வு செய்தனர். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சங்கர் ஜிவால், ‘’பிரதமர் வருகையை ஒட்டி நேரு உள்விளையாட்டு அரங்கில் 7 அடுக்கு பாதுகாப்பு போடப்பட உள்ளது. இன்று முதல் தீவிர வாகன சோதனை நடைபெறும்.
பாதுகாப்பு காரணங்களுக்காக 28, 29 ஆகிய தேதிகளில் சென்னை மாநகரில் ஹீலியம் பலூன்கள், ட்ரோன்கள் பறக்கவிட தடைவிதிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து சமூகவலைதளங்களில் பதிவிடுவோர் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்று கூறினார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்