Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

வாவ்.. இப்படியொரு அழகான கவர்ச்சியான படிக்கட்டுகளா? - புகழ்ந்து தள்ளிய ஆனந்த் மஹிந்திரா!

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கக் கூடியவர் முன்னணி தொழிலதிபரும், மஹிந்திரா நிறுவனத்தின் தலைவருமான ஆனந்த் மஹிந்திரா. தான் பார்க்கும் சில மனிதர்களின் அபரிமிதமான செயல்களை பாராட்டும் வகையில் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் எப்போதும் எதையாவது பதிவிட்ட வண்ணம் இருப்பார்.

அந்த பதிவுகள் வைரலாவதோடு, யாரென்றே தெரியாத சிலரது திறமைகள், வேலைகள் வெளியே தெரியவர ஆனந்த் மஹிந்திராவின் ஊக்குவிப்பும் ஒரு காரணமாக அமையும்.

அந்த வகையில், நேற்று (ஜூலை 16) மைக்ரோப்ளாக்கிங் அமைப்பில் மடக்கும் வகையிலான படிக்கட்டு தளத்தை தொழிலாளி ஒருவர் அமைத்திருந்த வீடியோவை பகிர்ந்து அந்த நபரை வெகுவாக பாராட்டியுள்ளார்.

இது தொடர்பான ஆனந்த் மஹிந்திராவின் ட்வீட்டில், “கட்டட வடிவமைப்புக்கு பிரபலமான ஸ்காண்டினாவியனர்களையே இந்த நபரின் வேலை பொறாமைகொள்ள வைக்கும். மிகவும் எளிமையானதுதான் ஆனால் புதுமையான வடிவமைப்பும்கூட. ஒரு அப்பட்டமான வெளிப்புறச் சுவற்றுக்கு ஒரு கவர்ச்சியான அழகியல் உறுப்பை சேர்க்கிறது. இது எங்கு நடந்தது என தெரியவில்லை. ஆனால் வாட்ஸ் அப் மூலம் பெறப்பட்டது.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

ஜப்பான், யூரோப் போன்ற நாடுகளில் இது போன்று ஸ்பேஸ் சேவிங் முறையில் கட்டடங்கள் வடிவமைக்கப்பட்டாலும் இந்தியாவிலும் இதுப் போன்று இருப்பது பிரமிக்கவைக்கிறது என பலரும் கமெண்ட் பாக்ஸை நிறைத்திருக்கிறார்கள். ஆனந்த் மஹிந்திரா பகிர்ந்த இந்த வீடியோவை 8 லட்சத்துக்கும் அதிகமானோர் கண்டு ரசித்திருக்கிறார்கள்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

https://ift.tt/KXCiGIZ

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

கருத்துரையிடுக

0 கருத்துகள்