இரவின் நிழல் படத்தை வெளியிட தடை விதிக்கக் கோரிய வழக்கில் நடிகர் பார்த்திபன் மற்றும் அவரது மகள் பதிலளிக்க சென்னை வணிக நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
விருது பெறும் நோக்குடன் 'இரவின் நிழல்' என்ற படத்தை தனது அகிரா புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிப்பதாகக் கூறி, நவீன் எண்டர்பிரைசஸ் பாஸ்கர் ராவிடம் படப்பிடிப்புக்கு தேவையான ஒளிப்பதிவு சாதனங்களை குறைந்த வாடகையில் நடிகர் பார்த்திபன் எடுத்துள்ளார்.

அதற்கான வாடகை பாக்கி 25 லட்சத்து 13 ஆயிரத்து 238 ரூபாயை செட்டில் செய்யமல் ஜூலை 15ஆம் தேதி படத்தை வெளியிட தடை விதிக்கக் கோரி பாஸ்கர் ராவ் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எல்.எஸ்.சத்தியமூர்த்தி, வழக்கு குறித்து நடிகர் பார்த்திபன், அவரது நிறுவனம், அதன் இயக்குனரான அவரது மகள் கீர்த்தனா ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜூலை 12-க்கு தள்ளிவைத்துள்ளார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
https://ift.tt/gsDjHAc

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

0 கருத்துகள்