ஒரு லட்சம் ரூபாய் செலுத்தினால் மாதம் முப்பதாயிரம் ரூபாய் வழங்குவதாக மோசடி செய்த புகாரில், ஆருத்ரா கோல்டு நிதி நிறுவன நிர்வாகிகளை பிடிக்க ஏழு டிஎஸ்பிக்கள் தலைமையிலான தனிப்படையினர் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகிறார்கள்.
பொதுமக்களிடம் ஒரு லட்ச ரூபாய் பணம் கட்டினால் மாதம் ஒன்றுக்கு 30 ஆயிரம் ரூபாய் வட்டி தருவதாக கூறிய கவர்ச்சிகரமான விளம்பரங்களை கூறி மோசடி செய்ததாக கடந்த 24ஆம் தேதி பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் ஆருத்ரா நிதி நிறுவனம் மற்றும் அதன் தொடர்புடைய தமிழகம் முழுவதும் 26 இடங்களில் அதிரடியாக சோதனை நடத்தினர். அதில், கணக்கில் காட்டப்படாத 3 கோடியே 41 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. நிதி நிறுவனத்தின் பதினோரு வங்கிக் கணக்குகள் முடக்கம் செய்யப்பட்டன.
இதையும் படிங்க... வாகன ஓட்டிகள் கவனத்திற்கு... சென்னையில் நாளை முதல் போக்குவரத்து மாற்றம்
இது தொடர்பாக ஆருத்ரா நிதி நிறுவனத்தின் இயக்குனர் உட்பட 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதில், ஆருத்ரா கோல்டு நிதி நிறுவனத்தின் இயக்குநர்களில் பாஸ்கர் மற்றும் மோகன் பாபு ஆகியோர் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
தலைமறைவாக உள்ள மற்ற 6 இயக்குனர்களை பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினர் இன்னும் தேடிக்கொண்டிருக்கிறார்கள். 7 டிஎஸ்பிக்கள் தலைமையில் பொருளாதார குற்றப்பிரிவு காவல் துறை தனிப்படை அமைத்து தேடும் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளது. இந்த தனிப்படையினர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் தேடுதலை முடுக்கிவிட்டுள்ளனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
https://ift.tt/bukwgX3ஒரு லட்சம் ரூபாய் செலுத்தினால் மாதம் முப்பதாயிரம் ரூபாய் வழங்குவதாக மோசடி செய்த புகாரில், ஆருத்ரா கோல்டு நிதி நிறுவன நிர்வாகிகளை பிடிக்க ஏழு டிஎஸ்பிக்கள் தலைமையிலான தனிப்படையினர் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகிறார்கள்.
பொதுமக்களிடம் ஒரு லட்ச ரூபாய் பணம் கட்டினால் மாதம் ஒன்றுக்கு 30 ஆயிரம் ரூபாய் வட்டி தருவதாக கூறிய கவர்ச்சிகரமான விளம்பரங்களை கூறி மோசடி செய்ததாக கடந்த 24ஆம் தேதி பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் ஆருத்ரா நிதி நிறுவனம் மற்றும் அதன் தொடர்புடைய தமிழகம் முழுவதும் 26 இடங்களில் அதிரடியாக சோதனை நடத்தினர். அதில், கணக்கில் காட்டப்படாத 3 கோடியே 41 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. நிதி நிறுவனத்தின் பதினோரு வங்கிக் கணக்குகள் முடக்கம் செய்யப்பட்டன.
இதையும் படிங்க... வாகன ஓட்டிகள் கவனத்திற்கு... சென்னையில் நாளை முதல் போக்குவரத்து மாற்றம்
இது தொடர்பாக ஆருத்ரா நிதி நிறுவனத்தின் இயக்குனர் உட்பட 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதில், ஆருத்ரா கோல்டு நிதி நிறுவனத்தின் இயக்குநர்களில் பாஸ்கர் மற்றும் மோகன் பாபு ஆகியோர் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
தலைமறைவாக உள்ள மற்ற 6 இயக்குனர்களை பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினர் இன்னும் தேடிக்கொண்டிருக்கிறார்கள். 7 டிஎஸ்பிக்கள் தலைமையில் பொருளாதார குற்றப்பிரிவு காவல் துறை தனிப்படை அமைத்து தேடும் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளது. இந்த தனிப்படையினர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் தேடுதலை முடுக்கிவிட்டுள்ளனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்