அ.தி.மு.க. ஒற்றைத் தலைமை விவகாரத்தில் நாளுக்குநாள் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவு கூடி வருகிறது.
கடந்த சில நாட்களாக அ.தி.மு.க. உட்கட்சி விவகாரமான ஒற்றைத் தலைமை விவகாரம் ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். மோதலாக வெடித்து வரும் நிலையில், முன்னாள் அமைச்சரும் மாணவர் அணி செயலாளருமான சிவபதி அளித்துள்ள பேட்டியில், “தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து மாவட்ட இளைஞரணி செயலாளர் மற்றும் நிர்வாகிகள் எடப்பாடியை சந்தித்துப் பேசினர். எங்களது கோரிக்கையை என்னவெனில் கட்சிக்குள் ஒற்றை தலைமையே வேண்டும். நான்காண்டு காலம் சிறப்பாக எடப்பாடி ஆட்சி செய்து வந்தார். எனவே ஓபிஎஸ் ஒற்றை தலைமையை ஒத்துப் போவது தான் அவருக்கு நல்லது. இரட்டை தலைமையினால் சரியாக செயல்பட முடியாது. அது உண்மைதான். அதற்காகவே ஒற்றை தலைமையை கேட்கிறோம்” இவ்வாறு அவர் தெரிவித்தார்.
முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் ஜக்கையன் இ.பி.எஸ். இல்லத்தில் எடப்பாடியை சந்தித்தப் பிறகு பேட்டியளித்ததாவது, “தேனி மாவட்ட நிர்வாகிகள் இபிஎஸ்-க்கு ஆதரவு. தேனி மாவட்ட செயலாளருக்கு, நிர்வாகிகளின் ஆதரவு உள்ளதா என்பதை அறிய வேண்டும். உட்கட்சி விவகாரம் என்பதால், 23-ம் தேதி நல்ல முடிவு வரும். நல்ல வாய்ப்பு இபிஎஸ்-க்கு உள்ளது. ஒற்றை தலைமை வேண்டும். எடப்பாடி தலைமையில் அந்த தலைமை இருக்க வேண்டும்” இவ்வாறு அவர் தெரிவித்தார்.
முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் இன்பதுரை அளித்துள்ள பேட்டியில், “ஒற்றை தலைமையை ஏற்படுத்த பொது குழுவிற்கு முழு அதிகாரம் இருக்கிறது. சட்டரீதியாக எந்த சிக்கலும் கிடையாது. தேர்தல் ஆணையத்திற்கு சென்று முறையிட்டால், ஒற்றை தலைமை தேர்ந்தெடுக்க வழி இருக்கிறதா என்ற கேள்வி கேட்பார்கள். அதற்கு அதிமுக சட்ட விதிப்படி வழி உள்ளது. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் விட கூடுதலான அதிகாரம் பொதுக்குழுவுக்கு இருக்கிறது” இவ்வாறு அவர் கூறினார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்