கும்பகோணம் அருகே காதல் திருமணம் செய்து கணவருடன் சகோதரர் வீட்டிற்கு சென்ற புதுமண தம்பதி படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக, அப்பெண்ணின் சகோதரர் மற்றும் மைத்துனர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கும்பகோணம் அருகே சோழபுரத்தில் காதல் திருமணம் முடித்த ஐந்து நாட்களில் சரண்யா - மோகன் என்ற இளம் தம்பதியினர், கொடூரமாக ஓட ஓட விரட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம், தமிழகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி வருகிறது. இதுதொடர்பாக சோழபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை கைது செய்து விசாரணை செய்து வரும் நிலையில், இச்சம்பவயிடத்தில் தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரவுளிப்ரியா டிஐஜி கயல்விழி உள்ளிட்டோர் நேரில் பார்வையிட்டு ஆய்வ செய்தும் வருகின்றனர். இந்நிலையில் இவ்வழக்கு கடந்து வந்த பாதை என்ன என்பது பற்றிய சில விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளன. அந்த விவரங்கள் இங்கே.
கும்பகோணம் அருகே சோழபுரம் துலுக்வேலியை சேர்ந்தவர்கள் சேகர் - தேன்மொழி தம்பதியினர் (பட்டியலின வகுப்பினர்). இவர்களுக்கு சக்திவேல், சதீஷ் மற்றும் சரவணன் ஆகிய மூன்று மகன்களும், சரண்யா என்ற மகளும் உள்ளார். தந்தை சேகர் கொத்தனாராக உள்ளார். மூத்த மகன் சக்திவேல் கொத்தனாராகவுள்ளார், மற்ற இரு மகன்கள் திருப்பூரில் உள்ள தனியார் நிறுவனத்திலும் வேலை பார்த்து வருகின்றனர். மூன்று மகன்களுக்குமே திருமணம் ஆகிவிட்ட நிலையில், ஒரே மகளான சரண்யா நர்சிங் படித்து விட்டு சென்னையில் கடந்த 4 ஆண்டுகளாக தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வந்துள்ளார்.
இதற்கிடையே, இவர்களின் தாயார் தேன்மொழிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை தரப்பட்டுள்ளது. அப்போது அதே மருத்துவமனையில் ஸ்ரீபெரும்புதூர், தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வரும் திருவண்ணாமலை மாவட்டம் பொன்னூர் சின்னத்தெருவை சேர்ந்த (செங்குந்த முதலியார் வகுப்பை சேர்ந்த) மோகன் என்பவரின் தாயாரும் உடல் நலக்குறைவு காரணமாக சிகிச்சைக்காக பெற்றுள்ளார். சரண்யாவும் மோகனும் ஒரே மருத்துவமனையில் வெவ்வேறு காரணங்களுக்காக இருந்து போது, அவர்களுக்குள் காதல் அரும்பியுள்ளது.
இருவரது தாயார்களும், சிகிச்சை முடிந்து அவரவர் வீடு திரும்பிய போதும், காதலர்கள் இருவர் மட்டும் அலைபேசி வழியாக தொடர்பு கொண்டு பேசி தங்களது காதலை வளர்த்துள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்னர் சரண்யாவும், மோகனும் சென்னையில் காதல் திருமணம் செய்துள்ளனர். மனநலம் பாதிக்கப்பட்ட தனது தாயை ஏற்கனவே மனநலம் பாதிக்கப்பட்ட தாயை பராமரித்து வரும் நர்சாக பணிபுரியும் சரண்யா தனது தாயை போல பார்த்துக் கொள்வார் என்ற எண்ணத்தில் மோகன் திருமணம் செய்துள்ளதாக தெரிகிறது.
ஆனால் சரண்யாவை, அவரின் அண்ணன் சக்திவேலின் மைத்துனர் ரஞ்சித்துக்கு திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டிருந்திருக்கிறது. ரஞ்சித்தை திருமணம் செய்து கொள்ளாமல் வேறு ஒருவரை திருமணம் செய்துகொண்டதை ரஞ்சித்தாலும், சக்திவேலாலும் ஏற்க முடியாமல் போனதாக சொல்லப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த சரண்யாவின் சகோதரர் சக்திவேல், அவருக்கு எதிராக சதித்திட்டம் தீட்டியுள்ளார். அதன்படி திட்டமிட்டு சரண்யாவை வீட்டிற்கு வரவழைத்தார்.
இதை அறியாத சரண்யா, தன் காதல் கணவருடன் நேற்று முன்தினம் சோழபுரம் துலுக்கவேலியில் உள்ள சரண்யா வீட்டிற்கு சென்றுள்ளனர். அங்கு நண்பகல் உணவு விருந்தை அவருக்கு அளித்துள்ளனர். விருந்து முடித்து மீண்டும் சென்னை செல்ல காதல் தம்பதியர் வீட்டிற்கு வெளியே வந்துள்ளனர். அப்போது சரண்யாவின் அண்ணன் சக்திவேல், சக்திவேலின் மைத்துனர் ரஞ்சித் ஆகிய இருவரும், வீட்டின் கதவை வெளிப்பக்கமாக தாளிட்ட பிறகு, அரிவாளை எடுத்துக் கொண்டு மோகனை வெட்டுவதற்காக விரட்டியதாக சொல்லப்படுகிறது. தப்பித்து செல்ல முயன்ற மோகனை, அவர் ஓட ஓட விரட்டிச் சென்று படுகொலை செய்துள்ளார். தொடர்ந்து சரண்யாவும் தப்பியோட அவரையும் விரட்டிச் சென்று படுகொலை செய்துள்ளனர்.
சம்பவத்தை தொடர்ந்து, இது குறித்து தகவல் அறிந்த சோழபுரம் போலீசார் இருவரது உடல்களையும் கைப்பற்றி வழக்கு பதிவு செய்து உடற்கூறு ஆய்விற்காக கும்பகோணம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர், சம்பவ இடத்திற்கு தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரவளிப்ரியா டிஎஸ்பிக்கள் கும்பகோணம் அசோகன், திருவிடைமருதூர் வெற்றிவேந்தன் தஞ்சை சரக டிஐஜி கயல்விழி ஆகியோர் விரைந்து வந்து ஆய்வு செய்தனர் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த காவல் கண்காணிப்பாளர், இப்படுகொலைகள் குடும்ப பிரச்னை காரணமாக நடந்துள்ளது, படுகொலை குறித்து நேரடி சாட்சியங்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது, இப்படுகொலை தொடர்புடைய சக்திவேல் மற்றும் ரஞ்சித் ஆகிய இருவரும் கும்பகோணம் கிழக்கு காவல்நிலையத்தில் சரணடைந்தனர்.
தொடர்புடைய செய்தி: காதல் திருமணம் செய்த தங்கை; படுகொலையில் ஈடுபட்ட அண்ணன் - கும்பகோணத்தில் கொடூரம்
திருவிடைமருதூரில் உள்ள மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நேற்று சோழபுரம் அருகே நடந்த இரட்டை கொலையில் தொடர்புடைய குற்றவாளிகளை இன்று நீதிபதி சிவ பழனி முன்பு ஆஜர் படுத்தப்பட்டனர். வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றவாளிகள் இருவரையும் 15 நாட்கள் (28 ஜூன் வரை) நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். பின்னர் சோழபுரம் போலீஸார் குற்றவாளிகளை திருச்சி மத்திய சிறைக்கு அழைத்து சென்றனர். இதைத்தொடர்ந்து நேற்று மாலை இருவரது உடல்களும் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே மருத்துவமனைக்கு சென்ற இளைஞர் அரன் அமைப்பை சேர்ந்த சைமன் பேட்டியளிக்கையில், “இந்த வழக்கை ஆணவப்படுகொலையாக பதிவு செய்ய வேண்டும். மேலும் ஆணவக்கொலை தனி சட்டம் இயற்ற வேண்டும். குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை பெற்றுத்தர வேண்டும்” எனவும் கோரிக்கை வைத்தனர்.
இதே கோரிக்கையை முன்வைத்து விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட், காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் கும்பகோணம் மாவட்ட தலைமை மருத்துவமனை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் “இன கலப்பு திருமணத்திற்கு எதிராக எந்த ஜாதியினர் படுகொலை செய்தாலும் அது ஆணவப்படுகொலை தான். குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை வழங்க வேண்டும். இதுபோன்ற ஆணவப்படுகொலை எதிராக தமிழக அரசு ஒரு உறுதியான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும்” எனவும் வலியுறுத்தினர்.
- செய்தியாளர்: காதர் உசைன்
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
https://ift.tt/An78YyCகும்பகோணம் அருகே காதல் திருமணம் செய்து கணவருடன் சகோதரர் வீட்டிற்கு சென்ற புதுமண தம்பதி படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக, அப்பெண்ணின் சகோதரர் மற்றும் மைத்துனர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்