Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

ரூபாய் நோட்டுகளில் காந்தியின் படம் நீக்கப்படுகிறதா? - ரிசர்வ் வங்கி விளக்கம்

https://ift.tt/5iaMTj6

ரூபாய் நோட்டுகளில் காந்தியின் உருவப் படம் மாற்றப்படாது என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இந்திய ரூபாய் நோட்டுகளில் இடம்பெற்றுள்ள தேசத்தந்தை மகாத்மா காந்தியின் புகைப்படத்தை மாற்றுவதற்கு ரிசர்வ் வங்கி ஆலோசித்து வருவதாக பல்வேறு ஊடகங்களில் செய்திகள் வெளியானது.Indian rupee - Wikipedia

குறிப்பாக நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வரும் சுபாஷ் சந்திர போஸ், ரவீந்திரநாத் தாகூர், அப்துல் கலாம் உள்ளிட்டோருடைய புகைப்படங்கள் ரூபாய் நோட்டுகளில் இடம் பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாகவும் தகவல்கள் வெளியானது. இதற்கு மறுப்பு தெரிவித்து ரிசர்வ் வங்கி தரப்பில் செய்தி அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக விளக்கம் அளித்துள்ள ரிசர்வ் வங்கி ரூபாய் நோட்டுகளில் காந்தியின் படம் மாற்றப்படும் என ஊடகங்களில் பரவி வந்த செய்தி உண்மையில்லை எனத் தெரிவித்துள்ளது. ரூபாய் நோட்டுகளில் மற்ற தலைவர்களின் படங்கள் இடம்பெறும் என வெளியான செய்தி வதந்தி என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. ரூபாய் நோட்டுகளில் காந்தியின் படத்தை மாற்ற வேண்டும் என எந்த கோரிக்கையும் வரவில்லை எனவும் விளக்கம் அளித்துள்ளது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

கருத்துரையிடுக

0 கருத்துகள்