உலகிலேயே மிக அதிக எடை கொண்ட திருக்கை வால் மீன் கம்போடியாவில் பிடிபட்டுள்ளது. அந்நாட்டில் பாயும் மேகோங் (Mekong) ஆற்றில் பிடிபட்ட மிகப்பெரிய திருக்கை வால் மீனைப் பிடித்த மீனவர்கள் வியந்து போயினர். அதை எடைபோட்ட போது, நம்ப முடியாத அளவுக்கு 300 கிலோ இருந்தது.
நீளத்தை அளந்தபோது, 13 அடி இருந்தது. திருக்கை வால் மீன் இவ்வளவு எடையில் இருப்பது இதுவே முதல்முறை என்று மீன்கள் குறித்த ஆய்வாளர்கள் வியப்புடன் கூறுகின்றனர். 2005 ஆம் ஆண்டு 293 கிலோ எடையுடன் பிடிபட்ட திருக்கை வால் மீன்தான் உலகிலேயே அதிக எடை கொண்டது என்ற பெருமையைப் பெற்றிருந்தது.
தற்போது கம்போடியாவில் சிக்கியுள்ள இந்த திருக்கை வால் மீன், தாய்லாந்து மீனின் சாதனையை முறியடித்துள்ளது. கம்போடியாவில் மேகோங் ஆற்றில் கிடைத்துள்ள இந்த மீனை, அந்நாட்டு மீனவர்கள் 'மேகோங் அதிசயம்' என்று கொண்டாடுகின்றனர். பௌர்ணமியன்று இந்த மீன் பிடிக்கப்பட்டதால் உள்ளூர்வாசிகள் இந்த மீனிற்கு "போராமி" என்று செல்லப்பெயர் சூட்டினர். போராமி என்றால் முழு நிலவு என்று அர்த்தம்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
https://ift.tt/S2mRbEDஉலகிலேயே மிக அதிக எடை கொண்ட திருக்கை வால் மீன் கம்போடியாவில் பிடிபட்டுள்ளது. அந்நாட்டில் பாயும் மேகோங் (Mekong) ஆற்றில் பிடிபட்ட மிகப்பெரிய திருக்கை வால் மீனைப் பிடித்த மீனவர்கள் வியந்து போயினர். அதை எடைபோட்ட போது, நம்ப முடியாத அளவுக்கு 300 கிலோ இருந்தது.
நீளத்தை அளந்தபோது, 13 அடி இருந்தது. திருக்கை வால் மீன் இவ்வளவு எடையில் இருப்பது இதுவே முதல்முறை என்று மீன்கள் குறித்த ஆய்வாளர்கள் வியப்புடன் கூறுகின்றனர். 2005 ஆம் ஆண்டு 293 கிலோ எடையுடன் பிடிபட்ட திருக்கை வால் மீன்தான் உலகிலேயே அதிக எடை கொண்டது என்ற பெருமையைப் பெற்றிருந்தது.
தற்போது கம்போடியாவில் சிக்கியுள்ள இந்த திருக்கை வால் மீன், தாய்லாந்து மீனின் சாதனையை முறியடித்துள்ளது. கம்போடியாவில் மேகோங் ஆற்றில் கிடைத்துள்ள இந்த மீனை, அந்நாட்டு மீனவர்கள் 'மேகோங் அதிசயம்' என்று கொண்டாடுகின்றனர். பௌர்ணமியன்று இந்த மீன் பிடிக்கப்பட்டதால் உள்ளூர்வாசிகள் இந்த மீனிற்கு "போராமி" என்று செல்லப்பெயர் சூட்டினர். போராமி என்றால் முழு நிலவு என்று அர்த்தம்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்