வங்கதேசத்தின் சீதகுண்டா நகரில் உள்ள ரசாயன பொருள் நிரப்பப்பட்டிருந்த கன்டெய்னர் வெடித்து சிதறியதில் கிடங்கில் இருந்த 40 பேர் உயிரிழந்துள்ளனர். 450 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
வங்கதேச நாட்டின் மிக முக்கிய கடல் துறைமுகமான சித்தகோங்கில் இருந்து 40 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ரசாயன கிடங்கில் இருந்த கன்டெய்னர் திடீரென வெடித்தது. அதில் இருந்த ரசாயனம் தீப் பற்றியதால் இந்த விபத்து நிகழ்ந்ததாக கூறப்படுகிறது.
இதில், கிடங்கில் பணியாற்றிக் கொண்டிருந்த 40 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். 450-க்கும் மேற்பட்டோர் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கன்டெய்னர் தீப்பற்றி வெடித்தது தொடர்பாக வங்கதேச காவல்துறையினர் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். முக்கிய துறைமுகத்தில் ஏற்பட்ட இந்த சம்பவம், வங்கதேச பாதுகாப்பு அதிகாரிகளை கவலை அடைய வைத்துள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
https://ift.tt/N7ALnlxவங்கதேசத்தின் சீதகுண்டா நகரில் உள்ள ரசாயன பொருள் நிரப்பப்பட்டிருந்த கன்டெய்னர் வெடித்து சிதறியதில் கிடங்கில் இருந்த 40 பேர் உயிரிழந்துள்ளனர். 450 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
வங்கதேச நாட்டின் மிக முக்கிய கடல் துறைமுகமான சித்தகோங்கில் இருந்து 40 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ரசாயன கிடங்கில் இருந்த கன்டெய்னர் திடீரென வெடித்தது. அதில் இருந்த ரசாயனம் தீப் பற்றியதால் இந்த விபத்து நிகழ்ந்ததாக கூறப்படுகிறது.
இதில், கிடங்கில் பணியாற்றிக் கொண்டிருந்த 40 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். 450-க்கும் மேற்பட்டோர் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கன்டெய்னர் தீப்பற்றி வெடித்தது தொடர்பாக வங்கதேச காவல்துறையினர் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். முக்கிய துறைமுகத்தில் ஏற்பட்ட இந்த சம்பவம், வங்கதேச பாதுகாப்பு அதிகாரிகளை கவலை அடைய வைத்துள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்