இந்தியா - தென் ஆப்ரிக்கா மோதும் முதல் டி20 போட்டி, டெல்லி அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் இன்று இரவு 7.00 மணிக்கு தொடங்குகிறது.
இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க அணி 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாட உள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் போட்டி டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் இன்று இரவு 7 மணிக்கு நடைபெறுகிறது. ரோஹித் சர்மா, விராட் கோலி, ஜஸ்பிரீத் பும்ரா, மொகமது ஷமி உள்ளிட்ட சீனியர் வீரர்களுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. கே.எல்.ராகுல் காயம் காரணமாக விலகி உள்ளதால் ரிஷப் பண்ட் தலைமையில் இந்திய அணி களமிறங்குகிறது. மீண்டும் அணிக்கு திரும்பியுள்ள தினேஷ் கார்த்திக், ஹர்திக் பாண்டியா, யுவேந்திர சாஹல் மற்றும் இளம் வீரர்கள் மீது எதிர்பார்ப்பு உள்ளது. ஹர்திக் துணை கேப்டனாக செயல்பட உள்ளார்.
டி20 கிரிக்கெட்டில் இந்திய அணி கடைசியாக ஆடிய 12 ஆட்டங்களில் தொடர்ச்சியாக வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டு டி20 உலக கோப்பை நடக்க இருப்பதால், வீரர்கள் தங்களை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்திலும் இருக்கின்றனர். அதே நெருக்கடி தெம்பா பவுமா தலைமையிலான தென்னாப்பிரிக்கா அணிக்கும் இருப்பதால் அவர்களும் முழு வேட்கையுடன் வரிந்து கட்டுவார்கள். இதனால் இன்றைய போட்டியில் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது.
இதையும் படிக்கலாம்: "இதுவே சரியான தருணம்" -சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து மிதாலி ராஜ் ஓய்வு!
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
https://ift.tt/Mexp7T4இந்தியா - தென் ஆப்ரிக்கா மோதும் முதல் டி20 போட்டி, டெல்லி அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் இன்று இரவு 7.00 மணிக்கு தொடங்குகிறது.
இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க அணி 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாட உள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் போட்டி டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் இன்று இரவு 7 மணிக்கு நடைபெறுகிறது. ரோஹித் சர்மா, விராட் கோலி, ஜஸ்பிரீத் பும்ரா, மொகமது ஷமி உள்ளிட்ட சீனியர் வீரர்களுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. கே.எல்.ராகுல் காயம் காரணமாக விலகி உள்ளதால் ரிஷப் பண்ட் தலைமையில் இந்திய அணி களமிறங்குகிறது. மீண்டும் அணிக்கு திரும்பியுள்ள தினேஷ் கார்த்திக், ஹர்திக் பாண்டியா, யுவேந்திர சாஹல் மற்றும் இளம் வீரர்கள் மீது எதிர்பார்ப்பு உள்ளது. ஹர்திக் துணை கேப்டனாக செயல்பட உள்ளார்.
டி20 கிரிக்கெட்டில் இந்திய அணி கடைசியாக ஆடிய 12 ஆட்டங்களில் தொடர்ச்சியாக வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டு டி20 உலக கோப்பை நடக்க இருப்பதால், வீரர்கள் தங்களை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்திலும் இருக்கின்றனர். அதே நெருக்கடி தெம்பா பவுமா தலைமையிலான தென்னாப்பிரிக்கா அணிக்கும் இருப்பதால் அவர்களும் முழு வேட்கையுடன் வரிந்து கட்டுவார்கள். இதனால் இன்றைய போட்டியில் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது.
இதையும் படிக்கலாம்: "இதுவே சரியான தருணம்" -சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து மிதாலி ராஜ் ஓய்வு!
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்