கடவுளுக்கு நிகராக முதியோரைக் கருதிய காலம் ஒன்றிருந்தது. இப்போது காலம் மிகவும் மாறிப் போய்விட்டது. முதியோரை மதிக்கும் பண்பாடென்பது பெரிதும் குறைந்துவிட்டது. கடவுளாகக் கருதப்பட்ட முதியவர்கள் இன்று சுமையாகவோ, தண்டனையாகவோ கருதப்படுகிறார்கள். இப்பிரச்சினையை நாம் ஆழ்ந்து நோக்கினால் முதியோரின் நிலைமை என்பது இன்று மிகவும் பரிதாபத்துக்குரியதாக உள்ளது, அவர்கள் வேண்டப்படாதவர்களாகவும், ஆறாவது விரலாகவுமே இருக்கிறார்கள். தனிமையும் புறக்கணிப்பும் அவர்களைப் பெருமளவில் பாதிக்கிறது. தாம் இருப்பதே தேவையற்ற ஒன்று என்று கருதத் தொடங்குகிறார்கள்.
சமீபகாலமாக கிராமங்களிலும் முதியோர் மதிக்கப்படுவதில்லை. நகர்புறங்களில் பல குடும்பங்களில் உள்ள முதியவர்களுக்கு தக்க மரியாதை கிடைப்பதில்லை. இதற்கு முக்கிய காரணம் வறுமை. வறுமைக்கோட்டிற்கு கீழே உள்ள குடும்பங்களில் நிதி வசதி குறைவால் பாதிக்கப்படுபவர்கள் முதியவர்களே. நிதி வசதி குறைவாக இருப்பதால் தன் குடும்பத்திற்கான தேவைகளை பூர்த்தி செய்யவே முடியாத நிலையில், முதியவர்களை கவனிப்பதும் அவர்களுக்கு தக்க மரியாதை கொடுப்பதும் அவசியம் இல்லை என்ற ஒரு நிலை ஏற்படுகிறது. ஓய்வூதியம் பெறும் முதியவர்கள் மற்றும் முதியோர் உதவித்தொகை பெறும் முதியவர்களை, இளைய சமுதாயம் கூட்டுக் குடும்பத்தில் வைத்துக் கொண்டு, பணத்திற்காக முதியவர்களை ஓரளவு மதித்து வருகிறார்கள்.
https://ift.tt/B2ogAFKகடவுளுக்கு நிகராக முதியோரைக் கருதிய காலம் ஒன்றிருந்தது. இப்போது காலம் மிகவும் மாறிப் போய்விட்டது. முதியோரை மதிக்கும் பண்பாடென்பது பெரிதும் குறைந்துவிட்டது. கடவுளாகக் கருதப்பட்ட முதியவர்கள் இன்று சுமையாகவோ, தண்டனையாகவோ கருதப்படுகிறார்கள். இப்பிரச்சினையை நாம் ஆழ்ந்து நோக்கினால் முதியோரின் நிலைமை என்பது இன்று மிகவும் பரிதாபத்துக்குரியதாக உள்ளது, அவர்கள் வேண்டப்படாதவர்களாகவும், ஆறாவது விரலாகவுமே இருக்கிறார்கள். தனிமையும் புறக்கணிப்பும் அவர்களைப் பெருமளவில் பாதிக்கிறது. தாம் இருப்பதே தேவையற்ற ஒன்று என்று கருதத் தொடங்குகிறார்கள்.
சமீபகாலமாக கிராமங்களிலும் முதியோர் மதிக்கப்படுவதில்லை. நகர்புறங்களில் பல குடும்பங்களில் உள்ள முதியவர்களுக்கு தக்க மரியாதை கிடைப்பதில்லை. இதற்கு முக்கிய காரணம் வறுமை. வறுமைக்கோட்டிற்கு கீழே உள்ள குடும்பங்களில் நிதி வசதி குறைவால் பாதிக்கப்படுபவர்கள் முதியவர்களே. நிதி வசதி குறைவாக இருப்பதால் தன் குடும்பத்திற்கான தேவைகளை பூர்த்தி செய்யவே முடியாத நிலையில், முதியவர்களை கவனிப்பதும் அவர்களுக்கு தக்க மரியாதை கொடுப்பதும் அவசியம் இல்லை என்ற ஒரு நிலை ஏற்படுகிறது. ஓய்வூதியம் பெறும் முதியவர்கள் மற்றும் முதியோர் உதவித்தொகை பெறும் முதியவர்களை, இளைய சமுதாயம் கூட்டுக் குடும்பத்தில் வைத்துக் கொண்டு, பணத்திற்காக முதியவர்களை ஓரளவு மதித்து வருகிறார்கள்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 கருத்துகள்