சீருடன், சிறப்புடன், செல்வத்துடன், புகழுடன் விளங்கி பின்னர் சீரழிந்த நாடுகள் உண்டு. செழித்து சிறந்து பின்னர் சிதைந்து நலிந்துபோன சமுதாயங்கள் உண்டு. அவை மீண்டும் துளிர்த்து எழுந்து புகழ்பெற்று நின்ற வரலாற்று நிகழ்வுகள் நிறையவே உண்டு. இந்த மாற்றங்களுக்கு எல்லா காலகட்டங்களிலும் அடித்தளமாக, மூலமாக யாரோ ஒரு தலைவன் இருந்திருப்பார். அதைக் கண்டு உணர நேர்கிறபோதுதான், இருந்ததும், இழந்ததும், மீண்டும் அதை அடைந்ததற்கும் அந்த யாரோ சில தலைவர்கள்தான் காரணம் என்பது சிந்திக்கவும், சிலிர்க்கவும் வைக்கக்கூடிய பேருண்மை. இதை பலர் உணர்ந்தும், சிலர் இன்னும் உணராததும் சமூக யதார்த்தம்.
பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண வழிமுறைகள், அவற்றை அடைவதற்கான கொள்கைகள், கோட்பாடுகள், லட்சியங்கள் என்கிற அடித்தளத்தில் உருவாகும் அமைப்புகள் அனைத்தும் வெற்றி முகட்டை எட்டியதில்லை. உருவாக்கிய தலைவர்களுக்குப் பின்னால் உருகிப் போனவை ஏராளம். தொடர்ந்து அந்தக் கடமையினை ஏற்று, ஓய்வின்றி லட்சியப் பாதையில் பயணம் மேற்கொண்ட, அடுத்தக்கட்ட தலைவர்களாலேயே அமைப்பின் வலிமையோ, மாற்றத்தின் தொடர்ச்சியோ, வளர்ச்சியின் பொலிவோ குன்றாமல் கொண்டு செல்லப்பட்டிருக்கின்றன. நாடுகள் பல. அவற்றில் உருவான பிரச்சினைகளும், அவற்றின் தன்மைகளும் பற்பல. உதிர்வதும், துளிர்ப்பதும் இயற்கையின் நியதி என்பதைப் போலவே மனித குலத்தில் மாற்றங்கள் நிகழும்.
https://ift.tt/McUHvOCசீருடன், சிறப்புடன், செல்வத்துடன், புகழுடன் விளங்கி பின்னர் சீரழிந்த நாடுகள் உண்டு. செழித்து சிறந்து பின்னர் சிதைந்து நலிந்துபோன சமுதாயங்கள் உண்டு. அவை மீண்டும் துளிர்த்து எழுந்து புகழ்பெற்று நின்ற வரலாற்று நிகழ்வுகள் நிறையவே உண்டு. இந்த மாற்றங்களுக்கு எல்லா காலகட்டங்களிலும் அடித்தளமாக, மூலமாக யாரோ ஒரு தலைவன் இருந்திருப்பார். அதைக் கண்டு உணர நேர்கிறபோதுதான், இருந்ததும், இழந்ததும், மீண்டும் அதை அடைந்ததற்கும் அந்த யாரோ சில தலைவர்கள்தான் காரணம் என்பது சிந்திக்கவும், சிலிர்க்கவும் வைக்கக்கூடிய பேருண்மை. இதை பலர் உணர்ந்தும், சிலர் இன்னும் உணராததும் சமூக யதார்த்தம்.
பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண வழிமுறைகள், அவற்றை அடைவதற்கான கொள்கைகள், கோட்பாடுகள், லட்சியங்கள் என்கிற அடித்தளத்தில் உருவாகும் அமைப்புகள் அனைத்தும் வெற்றி முகட்டை எட்டியதில்லை. உருவாக்கிய தலைவர்களுக்குப் பின்னால் உருகிப் போனவை ஏராளம். தொடர்ந்து அந்தக் கடமையினை ஏற்று, ஓய்வின்றி லட்சியப் பாதையில் பயணம் மேற்கொண்ட, அடுத்தக்கட்ட தலைவர்களாலேயே அமைப்பின் வலிமையோ, மாற்றத்தின் தொடர்ச்சியோ, வளர்ச்சியின் பொலிவோ குன்றாமல் கொண்டு செல்லப்பட்டிருக்கின்றன. நாடுகள் பல. அவற்றில் உருவான பிரச்சினைகளும், அவற்றின் தன்மைகளும் பற்பல. உதிர்வதும், துளிர்ப்பதும் இயற்கையின் நியதி என்பதைப் போலவே மனித குலத்தில் மாற்றங்கள் நிகழும்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 கருத்துகள்