Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

இந்த சீசனில் இதுவே கடைசிப் போட்டி - இன்று ராஜஸ்தானுடன் மோதும் சிஎஸ்கே

பிளே ஆஃப் ரேஸில் இருந்து ஏற்கனவே வெளியேறியுள்ள சென்னை அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் வெற்றியுடன் விடைபெற முயற்சிக்கும்.

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று இரவு 7:30 மணிக்கு மும்பை பிரபோர்ன் மைதானத்தில் நடக்கும் 68-வது லீக் ஆட்டத்தில் எம்எஸ் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதுகின்றன.

image

நடப்பு சாம்பியனான சிஎஸ்கே அணி இந்த சீசனில் இதுவரை விளையாடிய 13 போட்டிகளில் 4 வெற்றி, 9 தோல்விகளுடன் 8 புள்ளிகள் பெற்று 9ஆம் இடத்தில் உள்ளது. பிளே ஆஃப் ரேஸில் இருந்து ஏற்கனவே வெளியேறியுள்ள சென்னை அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் வெற்றியுடன் விடைபெற முயற்சிக்கும். தனது முந்தைய இரு லீக் ஆட்டங்களில் அடுத்தடுத்து தோல்வியை சந்தித்திருக்கும் அந்த அணி ரசிகர்களை திருப்திப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது.

மறுபுறம், ராஜஸ்தான் அணி இந்த தொடரில் இதுவரை விளையாடிய 13 போட்டிகளில் 8 வெற்றி, 5 தோல்விகளுடன் 16 புள்ளிகள் பெற்று 3ஆம் இடத்தில் உள்ளது. பிளே ஆஃப் சுற்றுக்கு  தகுதி பெறும் நிலையில் இருக்கும் அந்த அணி இன்றைய ஆட்டத்தில் வெற்றிபெற்றால் அடுத்த சுற்றுக்குள் நுழைந்துவிடும். ராஜஸ்தானின் ரன் ரேட் நல்ல நிலையில் உள்ளதால் ஒருவேளை தோல்வி அடைந்தாலும் பாதிப்பு வராது.

image

நடப்புத் தொடரில் அதிக ரன்கள் குவித்த வீரர்களுக்கான ஆரஞ்சு தொப்பியும், அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்களுக்கான ஊதா நிற தொப்பியும் ராஜஸ்தான் அணி வீரர்கள் வசம்தான் உள்ளது. அந்த அணியில் பேட்டிங்கில் பட்டையை கிளப்பிவரும் ஜோஸ் பட்லர் இதுவரை பங்கேற்ற 13 போட்டிகளில் 3 அரை சதங்கள், 3 சதங்கள் உட்பட 627 ரன்களை குவித்து, இந்த சீசனில் அதிக ரன்கள் விளாசிய பேட்ஸ்மேன்களின் பட்டியலில் தொடர்ந்து முதலிடம் பிடித்து வருகிறார். அதேபோல் 13 ஆட்டங்களில் 24 விக்கெட்டுகளை வீழ்த்தி நடப்பு தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் யுஸ்வேந்திர சாஹல் முதலிடத்தில் உள்ளார். பேட்டிங், பவுலிங் என இரண்டிலுமே பலமான அணியாக திகழும் ராஜஸ்தான் அணி இன்றைய ஆட்டத்தில் வென்று, புள்ளிப்பட்டியலில் வலுவாக நிலைநிறுத்திக் கொள்ள முயற்சிக்கும்.  

image

இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவன்:

ராஜஸ்தான் ராயல்ஸ்: 1.யஷஸ்வி ஜெய்ஸ்வால், 2.ஜோஸ் பட்லர் (விக்கெட் கீப்பர்), 3.சஞ்சு சாம்சன் (கேப்டன்), 4.தேவ்தத் பாடிக்கல், 5.ஷிம்ரோன் ஹெட்மியர், 6.ரியான் பராக், 7.ஆர் அஷ்வின், 8.ஜேம்ஸ் நீஷம் / ஓபேட் மெக்காய், 9.டிரெண்ட் யூசுவ்ன்ட், 10.யுஸ்வேந்திர சாஹல், 11.பிரசித் கிருஷ்ணா

சென்னை சூப்பர் கிங்ஸ்: 1.டெவோன் கான்வே, 2.ருதுராஜ் கெய்க்வாட், 3.மொயீன் அலி, 4.என் ஜெகதீசன், 5.சிவம் துபே, 6.மிட்செல் சான்ட்னர், 7.எம்எஸ் தோனி (கேப்டன் & விக்கெட் கீப்பர்), 8.பிரசாந்த் சோலங்கி, 9.சிமர்ஜீத் சிங், 10.முகேஷ் சவுத்ரி, 11.மதீஷ பத்திரன

இதையும் படிக்கலாம்: பழைய ஃபார்மிற்கு திரும்பிய விராட் கோலி - குஜராத்தை வீழ்த்தியது பெங்களூரு

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

https://ift.tt/3w67IrW

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

கருத்துரையிடுக

0 கருத்துகள்