திமுக மாநிலங்களைவை எம்.பி திருச்சி சிவாவின் மகன் சூர்யா, பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை சந்தித்து பாஜகவில் இணைந்தார்.
பாரம்பரியமாக திமுகவில் பல ஆண்டுகளாக இருந்தும், தனது தந்தைக்கும் தனக்கும் உரிய அங்கீகாரம் கொடுக்கப்படவில்லை என்ற அதிருப்தியில் திமுகவின் பிரபல பேச்சாளரும், நாடாளுமன்ற மூத்த உறுப்பினருமான திருச்சி சிவாவின் மகன் சூர்யா பாஜகவில் சேரமுடிவு செய்திருப்பதாக கடந்த சில நாட்களாகவே தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.
இந்த சூழலில் தற்போது சூர்யா, பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை நேரில் சந்தித்து அவர் தன்னை கட்சியில் இணைத்துக்கொண்டார்.
பாஜகவில் இணைந்த பின்னர் பேசிய சூர்யா சிவா, "தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி ஆளும் கட்சியாக வரும் என்ற நம்பிக்கையில் பாஜகவின் இணைந்துள்ளேன். திமுகவில் உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை என்பதாலேயே அதிலிருந்து விலகி தற்போது பாஜகவில் இணைத்துள்ளேன். பதவி வேண்டும் என்று பாஜகவுக்கு வரவில்லை, உழைப்புக்கான அங்கீகாரத்தை பாஜக கொடுக்கும். தான் பாஜகவில் இணைந்ததை எனது தந்தை ஏற்றுக்கொள்ளவிட்டால் பரவயில்லை, பாஜக தலைவர் அண்ணாமலை என்று கொண்டு விட்டார்" என்று கூறினார்.
மேலும், "திமுகவில் பல்வேறு விதமாக உட்கட்சி அரசியல் நடைபெற்று வருகிறது. மு.க.ஸ்டாலினின் மருமகன் ஒருபக்கம், உதயநிதி ஒருபக்கம், கனிமொழி ஒருபக்கம் என்று அரசியல் உள்ளது. கனிமொழியிடம் இருந்து தொடர்ச்சியாக அழைப்புகள் வந்தது, கட்சி மாற வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறேன், அதனால் கனிமொழியின் அழைப்புகளை எடுக்கவில்லை" என தெரிவித்தார்
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
https://ift.tt/9Cu5vN1திமுக மாநிலங்களைவை எம்.பி திருச்சி சிவாவின் மகன் சூர்யா, பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை சந்தித்து பாஜகவில் இணைந்தார்.
பாரம்பரியமாக திமுகவில் பல ஆண்டுகளாக இருந்தும், தனது தந்தைக்கும் தனக்கும் உரிய அங்கீகாரம் கொடுக்கப்படவில்லை என்ற அதிருப்தியில் திமுகவின் பிரபல பேச்சாளரும், நாடாளுமன்ற மூத்த உறுப்பினருமான திருச்சி சிவாவின் மகன் சூர்யா பாஜகவில் சேரமுடிவு செய்திருப்பதாக கடந்த சில நாட்களாகவே தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.
இந்த சூழலில் தற்போது சூர்யா, பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை நேரில் சந்தித்து அவர் தன்னை கட்சியில் இணைத்துக்கொண்டார்.
பாஜகவில் இணைந்த பின்னர் பேசிய சூர்யா சிவா, "தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி ஆளும் கட்சியாக வரும் என்ற நம்பிக்கையில் பாஜகவின் இணைந்துள்ளேன். திமுகவில் உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை என்பதாலேயே அதிலிருந்து விலகி தற்போது பாஜகவில் இணைத்துள்ளேன். பதவி வேண்டும் என்று பாஜகவுக்கு வரவில்லை, உழைப்புக்கான அங்கீகாரத்தை பாஜக கொடுக்கும். தான் பாஜகவில் இணைந்ததை எனது தந்தை ஏற்றுக்கொள்ளவிட்டால் பரவயில்லை, பாஜக தலைவர் அண்ணாமலை என்று கொண்டு விட்டார்" என்று கூறினார்.
மேலும், "திமுகவில் பல்வேறு விதமாக உட்கட்சி அரசியல் நடைபெற்று வருகிறது. மு.க.ஸ்டாலினின் மருமகன் ஒருபக்கம், உதயநிதி ஒருபக்கம், கனிமொழி ஒருபக்கம் என்று அரசியல் உள்ளது. கனிமொழியிடம் இருந்து தொடர்ச்சியாக அழைப்புகள் வந்தது, கட்சி மாற வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறேன், அதனால் கனிமொழியின் அழைப்புகளை எடுக்கவில்லை" என தெரிவித்தார்
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்